ஆள விடுங்க சாமி – ஹேட்டர்ஸ்களால் அர்ச்சனா எடுத்த அதிரடி முடிவு. அவரின் கடைசி ட்விட்.

0
50855
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் என்பது ஒரு நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். சம்யுக்தா வெளியேற்றத்திற்கு பின்னர் அர்ச்சனாவின் வெளியேற்றத்தை தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். அர்ச்சனா வெளியேறியதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கின் போது அர்ச்சனா ஒரு அணியிலும், நிஷா ஒரு அணியிலும் இருந்தனர்.

அப்போது அர்ச்சனாவிடம் இருந்து சோகம் அல்லது கோபம் என்று ஏதாவது உணர்வை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நிஷா எவ்வளவோ போராடினார்.ஒரு கட்டத்தில் மறைந்த அர்ச்சனாவின் தந்தை கேட்டு அர்ச்சனாவை சோகமடையச் செய்ய முயற்சித்தார் நிஷா. ஆனால், அப்போதும் அர்ச்சனா அசரவே இல்லை. இருப்பினும் அவர் முகம் சுகமாகனது என்று மற்றொரு ஹார்ட்டையும் பறித்தனர், ஆனால், இந்த டாஸ்க்கின் போது கடுப்பான அர்ச்சனாவை சமாதானப்படுத்த சென்ற பாலாஜி, இது ஒரு கேம் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறுகிறார், அப்போது அர்ச்சனா “என் தந்தை மரணம் விளையாட்டு அல்ல” என்று மிகவும் ஆக்ரோஷமாக கத்தி பேசி இருந்தார் அர்ச்சனா.

இதையும் பாருங்க : சித்ரா நினைவாக பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்த அந்த ஒரு விஷயமும் இனி இல்லை – கடும் அப்சட்டில் ரசிகர்கள்.

- Advertisement -

பின்னர் இந்த டாஸ்க்கிற்கு என் அப்பாவின் மரணம் தான் கிடைத்ததா நிஷா என்று அர்ச்சனா கூறியதால், நிஷா அவரை சமாதானம் செய்ய பார்த்தபோது அவரும் கொஞ்சம் ஆவேசமாக பேசினார். ஆனால், அப்போதும் அர்ச்சனா சமாதானம் ஆகவில்லை. பின்னர் நிஷா எப்படியோ அழுது புலம்பி எப்படியோ அர்ச்சனாவை சமாதானம் செய்தார். ஒரு கட்டத்தில் மழை பெய்ய அதை பார்த்த அர்ச்சனா, இந்த மழை தான் எங்க அப்பா என்று கூற, அப்பா என்னை மன்னிச்சிடுங்க அப்பா, அப்பா என்று நிஷா ஒரு ஆஸ்கார் பெர்மார்மன்ஸையே செய்தார்.

அர்ச்சனா மற்றும் நிஷாவின் இந்த செயலை பலரும் சமூக வலைதளத்தில் கேலி செய்தனர். மேலும், இதை பல்வேறு மீம் கிரியேட்டர்களும் கலாய்த்து இருந்தனர். அதே போல அர்ச்சனா உள்ளே இருந்த போது நிஷாவிடம் அன்பு ஜெய்க்கும்னு நம்புறயா என்று ஆவேசமாக கேட்ட வீடியோ கூட அந்த சமயத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளானது. அர்ச்சனா வெளியேறியதற்கு முக்கிய காரணமே அவரது ஓவரான அன்பு ஸ்டரட்ர்ஜி தான் என்று பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் இதே விஷயத்தை குறிப்பிட்டு பலரும் அர்ச்சனாவை கேலி செய்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : ராஷ்மிகா ட்வீட்டிற்கு கமன்ட் செய்த முன்னாள் காதலர் – அசிங்கப்படுத்திய ராஷ்மிகா.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட அர்ச்சனா, தன்னுடைய லவ் பேட் கேங்கான ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பாத்திட்டிருந்தார். அதையும் பலரும் கேலி செய்தார்கள். இப்படி ஒரு நிலையில் இனிமேல் ட்விட்டரில் வரவே மாட்டேன் என்று கூறியுள்ளார் அர்ச்சனா. இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த லவ் மற்றும் வெறுப்பிற்கு இடையில் நான் நொந்து போய்விட்டேன். நான் ட்விட்டரில் இருந்து விலகுவதை கொண்டாட தயாராக இருக்கும் ஹேட்டர்ஸ்களே நான் கண்டிப்பாக மீண்டும் உறுதியோடு வருவேன். உங்களின் அடுத்த குறியை தேர்ந்தெடுங்கள் என்று குறிப்பிட்டு SpreadLoveNotHate #Iamwhoiam #LifeBeyondBiggBoss என்று பல டேக்குகளை போட்டுள்ளார்.

Advertisement