விஜய் டிவி தொகுப்பாளினியாக மாறிய அர்ச்சனா – எந்த நிகழ்ச்சி ? எப்போது தெரியுமா ?

0
4843
Archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்,அதில் பிரபல தொகுப்பாளினியாக அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் தொலைக்காட்சியில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கும் ‘காதலே காதலே’ நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக மாறி உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பிக் பாஸில் கலந்துகொள்வதற்கு முன்பாக அர்ச்சனா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். ஜீ தமிழ் சேனலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அர்ச்சனா பிக் பாஸில் கலந்து கொண்டதாக கூட கூறப்பட்டது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.அதில், ஜீ தமிழ் சேனல்ல இருந்து நான் வெளியேறிட்டதாவும், பெரிய தொகை வாங்கிட்டுத்தான் `பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குள் போனதாகவும் பேச்சுகள் எழுந்திருக்கு. இந்த இரண்டுமே உண்மையில்ல. ஜீ தமிழ் சேனல்ல ஆறு வருஷம் ராணி மாதிரி தொகுப்பாளரா வேலை செஞ்சேன்.

ஆனா, ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒப்பந்த அடிப்படையில்தான் வேலை செஞ்சேனே தவிர, அந்த சேனலின் ஊழியரா நான் செயல்படல. என்னோட தனிப்பட்ட வளர்ச்சிக்காக அந்த சேனல்ல இருந்து வெளியேறிய நிலையிலதான், எனக்கு `பிக்பாஸ்’ வாய்ப்பு வந்தது . ரெண்டு வெவ்வேறு விஷயம் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இவர் இந்த நிகழ்ச்சியின் நிரந்திர தொகுப்பாளரா இல்லை தற்போது மட்டும் தொகுப்பாளராக பணியாற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement