தனது தங்கையோடு சிறு வயதில் அர்ச்சனா எடுத்துக்கொண்ட புகைப்படம் – வைரலாகும் புகைப்படம்.

0
938
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்,அதில் பிரபல தொகுப்பாளினியாக அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்.

இதையும் பாருங்க : குட்டி மாரி வந்துட்டார் – கர்ணன் இயக்குனர் மாரி செல்வராஜ் மனைவி பதிவிட்ட புகைப்படம்.

- Advertisement -

பெப்சி உமாவிற்கு பிறகு சன் தொலைக்காட்சியில் பிரபலமான பெண் தொகுப்பாளனி என்றால் அது அர்ச்சனா என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி அன்றைய 90ஸ் கிட்ஸ்களின் ஒரு பேவரைட் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும்.இப்படி ஒரு நிலையில் 19 ஆண்டுகளுக்கு முன் அதாவது 2002 ஆம் ஆண்டு முதன் முறையாக பிரபல கால்கி இதழின் அட்டை படத்தில் அர்ச்சனாவின் புகைப்படம் இடம்பெற்றள்ளது. அதனை அர்ச்சனா சமீபத்தில் பதிவிட்டு இருந்தார்.

அர்ச்சனாவிற்கு அனிதா என்ற சகோதரி இருக்கிறார். இவர் சொந்தமாக வாவ் லைப் என்ற யூடுயூப் சேனல் ஒன்றையம் நடத்தி வருகிறார். மேலும், சமீபத்தில் தான் இவரது வளைகாப்பு கூட நடைபெற்றது. இதில் ஆரி உட்பட பல்வேறு பிக் பாஸ் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் அர்ச்சனா, தனது சகோதரியுடன் பள்ளிப் பருவ வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement