அழு மூஞ்சி To வின்னர் – அர்ச்சனாவின் வெற்றிக்கு போட்டியாளர் கொடுத்த இந்த விஷயம் தான் காரணமா?

0
539
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 106 நாட்களில் கடந்த ஞாயிறு கிழமை கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்திருந்தார்கள். அதில் ஒன்று தான் இரண்டு பிக் பாஸ் வீடு. மேலும், இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார்.இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை தினேஷ், நான்காம் இடத்தை விஷ்ணு, ஐந்தாம் இடத்தை மாயா பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பதினைந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாட் மற்றும் ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பிக் பாஸ் 7:

அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆனதற்கு பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் பட்டதை அர்ச்சனா பெற்றதற்கு காரணம் அவர் கையில் இருந்த பிரேஸ்லெட் தான் என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் எதற்கு எடுத்தாலும் அழுது கொண்டே இருந்தார். இதனால் இவர் வீட்டை விட்டு வெளியே சென்று விடலாம் என்றெல்லாம் யோசித்து இருந்தார். அர்ச்சனா என்றால் அழுகை என்று அவருடைய அடையாளமாக மாறியது.

அர்ச்சனா குறித்த தகவல்:

அப்போது போட்டியாளராக இருந்த ஆர் ஜே ப்ராவோ தன்னிடம் இருந்த ஜெபமாலை பிரேஸ்லெட்டை அர்ச்சனாவிடம் கொடுத்து, இது மலேசியா பத்து மாலை முருகன் கோவிலில் வாங்கியது. இதை வைத்துக் கொள் என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொடுத்து விட்டு சென்றார். அர்ச்சனா அந்த மாலையை நம்பினார். அந்த ஜெபமாலை கையிலே வைத்திருந்தார். அதற்கு பிறகு தான் அர்ச்சனாவுடைய ஆட்டமே மாறியது. பூனை போல் பதுங்கி இருந்த அர்ச்சனா புலி போல சீறிப்பாய்ந்தார். குறிப்பாக, மாயா புள்ளிகேங்க் உடன் அவர் மோதியதெல்லாம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

-விளம்பரம்-

பிராவோ சொன்னது:

அது பார்வையாளருக்கு ஷாக் கொடுத்தது என்று சொல்லலாம். அதற்குப் பிறகு அர்ச்சனா தொடர்ந்து தன்னுடைய ஆவேசமான ஆட்டத்தை காட்டினார். கடைசி நாள் வரைக்கும் மற்ற போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி தள்ளினாலும் விடாமல் தைரியமாக மோதி விளையாடினார். கடைசி வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ப்ராவோ, நான் தந்த மாலை பத்து மாலை முருகன் கோவிலில் வாங்கியது இல்லை. ஆனால், அது உன்னுடைய தைரியத்தை எப்படி உயர்த்தியது, பார்த்தியா? என்று சொன்னார்.

அர்ச்சனா நம்பிக்கை:

அவருடைய திறமை வெற்றிக்கு காரணமாக இருந்தாலும் சில பாசிட்டிவான விஷயங்கள் அவருக்கு உதவியாக இருந்தது. ஒரு விஷயம் உண்மை என்று நம்பினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அப்படித்தான் அர்ச்சனா வாழ்க்கையிலும் நடந்தது. அர்ச்சனா போல வாழ்க்கையில் பிரச்சனை, தடுமாறும் நேரங்களில் பாசிட்டிவான விஷயத்தை நம்பினால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.

Advertisement