இங்க நான் பண்ணாதத மக்கள் கிட்ட சொன்னீங்க – பிக் பாஸ் வீட்டிற்கு சென்றதும் போட்டியாளரை குறை சொன்ன அசல்.

0
539
asal
- Advertisement -

பிக் பாஸில் தன்னுடைய பெயரை டேமேஜ் செய்துவிட்டதாக அசல் கோளாறு குறை சொல்லி இருக்கும் வீடியோ சமூக வலைதடலத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி இருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன்,ரச்சித்தா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர். தற்போது அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,,Adk என்று 7 பேர் மட்டும் விளையாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

கடந்தவாரம் நடைபெற்ற நாமினேஷனில் விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா நந்தினி, அமுதவனான்,ரச்சிதா,Adk என்று 7 பேர் நாமினேஷ் ஆகி இருந்தனர். இதில் கடந்த வார நிகழ்ச்சியில் ரச்சித்தா வெளியேறி இருந்தார். அதே போல இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்க் வென்ற அமுதவானனை தவிர மற்ற 6 பேரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பல போட்டியாளர்கள் உள்ளே சென்ற வண்ணம் இருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று அசல் கோளாறு சென்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பரிச்சியமில்லாத நபராக கலந்து கொண்டு இருந்தவர் அசல். வசந்த குமார் என்ற தனது பெயரை அசல் கொலார் என மாற்றிவைத்து இருக்கிறார். இவர் ‘ஜோர்த்தாலே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ் நாராயணன், யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையிலும் பாடல்களை அசல் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பெண்களிடம் வழிவது, திமிராக பேசுவது என்று இருந்தார். குயின்சி மீது ஆரம்பத்தில் இருந்தே அசல் கோலாருக்கு ஒரு கண் இருந்தது. ஆனால், குயின்சி செட் ஆகவில்லை என்று நினைத்து சிங்கப்பூர் மாடல் அழகி நிவாசினிடம் கடலை போட ஆரம்பித்தார் அசல். அதுமட்டுமில்லாமல் நிவாஸினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் அசல் வேலைகளை செய்து இருந்தார். இது எல்லாம் ரசிகர்களுக்கு கடுப்பேற்றி இருந்தது.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் நிவாஷினியிடம் நீச்சல் குளம் அருகில் படுத்து கொண்டு பேசுவது, அவர் மடியில் உட்காருவது, அவரை கடிப்பது போன்ற பல முகம் சுழிக்கும் வேலைகளை செய்து இருந்தார். மேலும், இதுபோன்ற நபரை Red Card கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் கூறி இருந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அசல் வெளியேறிய போது இவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பை இவர் தவற விட்டு விட்டார் என்று பலரும் கூறி வந்தனர்.

சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் ‘பொதுவாக இந்த இடத்தில் இருந்து வருபவன் எல்லாம் அப்படி தான் இருப்பான் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. வெளியில் நான் எப்படி இருந்தேனோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருந்தேன். ன் நான் தவறாக நடந்து கொண்டதாக பலர் கூறுகிறார்கள் ஒருவேளை நான் தவறாக நடந்து இருந்தேன் என்றால் அந்த பெண்களே சொல்லியிருப்பார்களே என்னை பொறுத்தவரை நான் எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும் நான் நடந்து கொண்ட விதம் மக்களுக்கு தவறாக தெரிந்திருந்தால் அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்

Advertisement