ஓட்டிங்கில் கடைசி 3 இடத்தில் இருந்த நபர்கள் – இறுதியில் வெளியேறியது இவர் தான். இப்போ சந்தோசமா ?

0
802
Biggboss
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது வாரம் எவிக்ஷனில் இருந்து வெளியேற இருக்கும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரத்தின் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம், அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் கொண்டு வந்து இருக்கிறது. இதனால் போட்டியாளர்கள் ஓவ்வொருவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட ஜிபி முத்து குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார்.

- Advertisement -

பொம்மை டாஸ்க்:

இது பலருக்குமே அதிர்ச்சியை தந்திருந்தது. இவரை தொடர்ந்து கடந்த வாரம் முதல் எவிக்சன் நடந்தது. அதில் மெட்டிஒலி சாந்தி வெளியேறி இருந்தார். பின் வழக்கம் போல் மூன்றாவது வாரத்தில் பொம்மை டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க் கொடுத்தவுடன் போட்டியாளர்கள் மத்தியில் கலவரம் தொடங்கி இருந்தது. இந்த டாஸ்க் கொடுத்ததில் இருந்து அசீம் ஏற்கனவே இருந்ததை விட இன்னும் ஓவராக நடந்து கொண்டு இருந்தார்.

வீட்டில் அசீம் குறித்த சர்ச்சை:

மேலும், சில தினங்களுக்கு முன்பு போட்டியில் நிவாசினி கீழே விழுந்ததற்கு காரணம் தனலட்சுமி தான் என்று கடுமையாக திட்டி இருந்தார் அசீம் . இதற்கு தனலக்ஷ்மியும் பிக் பாஸ் சொல்லட்டும் என்று பொறுமையாக இருக்கிறார். இப்படி இந்த பொம்மை டாஸ்க் பயங்கர கலவரமாக சென்றிருந்தது. இந்நிலையில் இரண்டாவது வார எவிக்ஷனில் வெளியேறும் நபர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

இரண்டாவது வாரம் எவிக்ஷன்:

இந்த வாரம் எவிக்ஷன் லிஸ்டில் அசீம் , ஆயிஷா, மகேஸ்வரி, அசல் கோளாறு, தனலட்சுமி இருக்கின்றனர். இதில் ரசிகர்கள் மத்தியில் அதிக வெறுப்பை சம்பாதித்து இருப்பவர் என்றால் அசீம் தான். அவர் நடந்து கொண்ட விதமும் பேச்சும் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் தனலட்சுமி இடம் அசீம் நடந்து கொண்ட விதத்திற்கு கண்டிப்பாக கமல் ஒரு அதிரடி முடிவை எடுக்க வேண்டும் என்றெல்லாம் ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர். அதோடு போன வாரமே அசிமுக்கு ரெட் கார்ட் வார்னிங் கொடுக்கப்பட்டிருந்தது.

Asal

வெளியேறும் நபர்:

இருந்தாலும், அவர் அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் முன்பிருந்ததை விட திமிராக விளையாடியிருக்கிறார்.
இவரை எடுத்து குறைந்த வாக்குகள் அசல் கோளாறு பெற்று இருக்கிறார். இவர் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், இவர் பெண்களிடம் நடந்து கொள்ளும் விதம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அசலும் இந்த வரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement