வடிவேலுவையும் விட்டு வைக்காத அசல் கோளாறு – Recordingல என்ன பண்ணி இருக்கார் பாருங்க.

0
430
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் தான் வைகை புயல் வடிவேலு. தன்னுடைய நகைச்சுவையின் மூலம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பிச்சை காரனாக இருந்தாலும் சரி பேரரசனாக இருந்தாலும் சரி தன்னுடைய தனித்தன்மையான நகைச்சிவையின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடைக்கு செய்வதிலிருந்து, இங்கிருந்த கிணற்றை காணவில்லை ஏற்றும், வடபோச்சே, இப்பவே கண்ணைக்கட்டுதே போன்று எந்த மீம்ஸ்களும், கண்டன்ட்களும் இருந்தாலும் சரி இவரை வைத்துதான் இருக்கும். சொல்லப் போனால் கண்டன்ட் கிரியாக்டர்களின் கடவுளாக வாழ்ந்து வருகிறார் நடிகர் வடிவேலு என்பதற்கு மாற்றுக்கருதில்லை.

-விளம்பரம்-

மதுரை மாவட்டத்தை சேர்ந்த வடிவேலு நடிகர் டி.ராஜேந்திரன் நடித்திருந்த “என் தங்கை கல்யாணி” என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் ராஜ்கிரண் நடித்திருந்த “என் ராசாவின் மனசுலே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாக்கினார். அதன் பின்னர் கவுண்டமணி, செந்தில் போன்ற அப்போதைய சிறந்த காமெடி நடிகர்களுடன் இணைத்து நடித்து வந்த வடிவேலு காலப்போக்கில் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு ராசிகர் கூட்டத்தை உருவாக்கி இருக்கிறார். அப்போதிலிருந்து இப்போது வரை அவரின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை.

- Advertisement -

தன்னுடைய உடல் பாவத்தின் மூலமும், எதிர்த்தமான பேச்சின் மூலமும் ரசிகர்களை கட்டியிழுத்த நடிகர் வடிவேலு இம்மசை அரசன் 24ஆம் புலிக்கேசி ஊதிய பிரச்னையினாலும், நடிகரும் அரசியல் வாதியுமான விஜயகாந்த் உடனான கருத்து வேறுபாடுகளினாலும் சில காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில்தான் தற்போது மீண்டும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்துளளார்.

நாய் சேகர் ரிட்டர்ன் திரைப்படத்தில் பாடகியும், தொகுப்பாளனியுமான ஷிவாங்கி கிருஷ்ணகுமார், ரெட்டின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், லொள்ளு சபா மாறன், ஆர்ஜே விக்னேஷ் போன்ற நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படமானது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் இப்படத்தின் முதல் சிங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது அப்பாடலை தற்போது நடந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகச்சியுன் போட்டியாளர்களில் ஒருவரான அசல் கோளாறு எழுத சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

-விளம்பரம்-

அப்பத்தா என்ற “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் முதல் பாடலானது வெளியாகிய சிறிது நேரத்திலேயே மில்லியன் பார்வைகளை தாண்டியது. இப்பாடலில் தன்னுடைய வாழ்கை, சினிமாவில் நடந்த குளறுபடிக்கை, தான் மீண்டும் சினிமாவிற்கு வந்தது என மறைமுகமாக நடிக்கிற வடிவேலுவை பற்றி பல கருத்துக்கள் இருந்தது. இப்படியிருக்கும் போது இப்பாடலை எழுதிய பிக் பாஸ் சீசன்6 போட்டியாளரான அசல் கோளாறு நடிகர் வடிவேலுவுடன் இணைந்து டப்பிங் தியேட்டரில் சேட்டைகள் செய்த விடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement