முதன் முறையாக தனது காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யா தத்தா.!

0
2368
Aiswarya-Dutta
- Advertisement -

நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ரசிகர்கள் மனதில் முதல் இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் ஆரியுடன் ஒரு படம், நடிகர் மஹத்துடன் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன் டா ‘ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் M in ❤ அதாவது தான் காதலில் இருப்பதாக மிக சூசகமாக தெரிவித்துள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் அனைவரும் அந்த நபர் யார் என்று கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆண் நபருடன் தனிமையில் இரவு பார்ட்டிக்கு சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ்ஸில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட பிறகு ஐஸ்வர்யா காதலில் விழுந்துள்ளதாக கூறிய நபர் இவர் தானோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

-விளம்பரம்-

ஐஸ்வர்யா தத்தா, கோபி என்பவரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. ஏனெனில் அவர் தனது கைவிரலில் கோபி என்ற பெயரைத்தான் பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா காதலித்து வருவதாக கூறப்படும் கோபி பண மோசடி வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர் தான் அந்த கோபியோ.

Advertisement