பிக் பாஸ் குறித்து ஐஸ்வர்யா போட்ட போஸ்ட்.! குவியும் ரசிகர்களின் கமன்ட்.!

0
566
Aiswarya-Dutta

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா, அந்த சீசனில் இரண்டாவது பரிசை தட்டிச்சென்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார். ஐஸ்வர்யா தற்போது மஹத் நடித்து வரும் ‘கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவரின் அடுத்த படத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்தப் படத்தை பிரபு ராம் சி இயக்குகிறார்.

இவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்திருந்த ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல அம்மணி பல கவர்ச்சி யான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாகவே வைத்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவதாக பரிசு வென்று ஓராண்டு நிறைவடைந்துள்ளதாம். அதனால் தனது ரசிகர்களுக்கு நன்றிதெர்வித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவி ஒன்றை போட்டுள்ளார். அவரது ரசிகர்களும் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர் என்று வாழ்த்தி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவர், யாஷிகாவிடம் தான் நட்பு கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் யாஷிகாவுடன் ஓராண்டு நட்பு நிறைவடைந்ததையொட்டி சில பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா.