நித்யா மற்றும் பாலாஜி பஞ்சாயத்து படு மும்மரமாகி வருகிறது. கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலாஜிவின் மனைவி நித்யாவும் கலந்து கொண்டார். பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் நிகழ்ச்சி முடிவதற்குள் ஒன்றிணைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போதும் இவர்கள் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு பாலாஜி மீது அவரது மனைவி மீண்டும் மாதவரம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் மது அருந்துவிட்டு பாலாஜி தகாத வார்த்தைகளில் திட்டியதோடு வீட்டிற்கு வந்து கண்ணாடியை உடைத்தாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
இதையும் படியுங்க : புகார் அளித்த நித்யா.! காவல் நிலையம் சென்ற பாலாஜி.! அப்புறம் என்ன நடந்தது.!
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாலாஜி, காவல் உதவி ஆய்வாளர் மனோஜ் குமார் என் குடும்பத்தை நாசமாக்கிவிட்டார். என் மன உளைச்சலுக்கு அவர் தான் காரணம். அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதயடுத்து மனோஜ் குமார் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜி நித்யா குறித்து பேசுகையில், அவர் சாக்கடையில் விழுந்து விட்டார். போல ஒரு மோசமான பெண்ணே கிடையாது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதற்காக அவருக்கு 4 ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால், வெளியே வந்த்தும் விஜய் டிவி பற்றி மோசமாக பேசிய நித்யா, பிக் பாஸ் நிகழ்ச்சி அனைத்தும் பொய் என்று கூறியிருந்தார் என்று பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.