பாலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம். கேக்கில் என்ன எழுதப்பட்டுள்ளது பாருங்க.

0
8040
bala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 59 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா வேல்முருகன் சுரேஷ் சக்ரவர்த்தி சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறி இருந்தார் மற்ற போட்டியாளர்கள் வெளியேறியதைவிட சம்யுக்தாவின் வெளியேற்றம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு முக்கிய காரணமே இவர் வெளியேறுவதற்கு முன்பாக இவருக்கு குறும்படம் போடப்பட்டு இருந்தது. அதே மற்ற போட்டியாளர்கள் வழி அனுப்பி வைக்கப்பட்ட விதத்தை விட சம்யுக்தாவை மற்ற போட்டியாளர்கள் வழியனுப்பி வைத்த விதம் மிகவும் நன்றாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

இதனிடையே கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்கில் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரம்யா, ஜித்தன் ரமேஷ், பாலாஜி ஆகிய மூவருக்கும் இந்த வார தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றது. இதில் ஜித்தன் ரமேஷ் இந்த வாரம் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இந்த வார இறுதியில் இருந்து தப்பித்து விட்டார். கடந்த திங்கள் கிழமை வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் வேலைகள் துவங்கியது. வழக்கம் போல போட்டியாளர்கள் நாமினேட் செய்ததர்க்கான காரணத்தை கூறி கொஞ்சம் பற்ற வைத்தார் பிக் பாஸ்.

- Advertisement -

நாமினேஷன் அடிப்படையில் இந்த வாரம் ஆரி, சனம் ஷெட்டி, அனிதா, ஆஜித், சிவானி, ரம்யா, நிஷா ஆகிய 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கண்டிப்பாக அஜித், சிவானி, நிஷா, அனிதா ஆகிய 4 பேருக்கு கடும் போட்டிகள் எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கால் சென்டர் டாஸ்க் தற்போது மீண்டும் துவங்கி இருக்கிறது.

இதில் நேற்றய நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாலா – ஆரி கால் மிகவும் ஏமாற்றமாக இருந்தது. கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜட் டாஸ்கின் அடிப்படையில் யார் சிறப்பாக செயல்பட்டார்கள் என்பதன் அடிப்படையில் 1 -ல் இருந்து 13 வரை வரிசைபடுத்துமாறு கூறப்பட்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வந்துள்ள கேக்கில் ‘கப்பு முக்கியம் குமாரு’ என்று எழுதப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement