விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது.அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பாருங்க : திருமணம் எல்லாம் ஆகல, ஆனால் நெற்றியில் குங்குமம் வைப்பது எதனால் – சனம் ஷெட்டி விளக்கம்.
இப்படி ஒரு நிலையில் பாலாஜிக்கும் நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படைக்கும் இருக்கும் சம்மந்தம் குறித்தும் பிரபல நாளிதழ் ஒன்று வீடியோ வெளியிட்டது. அதாவது, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் அஜய் வாண்டையார் பாலாஜிக்கு மிகவும் நெருக்கம் என்றும். அவரின் சிபாரிசு பேரிலேயே கருணாஸின் மனைவியான கிரேஸ் கருணாஸ் விஜய் டிவியிடம் சிபாரிசு செய்து தான் பாலாஜிக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஒரு ஜாதி அமைப்புடன் தன்னை தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பாத பாலாஜி, தனது தோழியான பிக் பாஸ் ஷெரின் தாயாரின் மூலமாக தான் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததாக கூறினாராம். அதுமட்டுமல்லாமல். முக்குலத்தோர் புலிப்படையில் பாலாஜிக்கு கடந்த ஆண்டு மாநில கலை இலக்கிய பிரிவு செயலாளர் பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் பாலாஜி ஜய் வாண்டையாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.