மது கடைய மூடுங்க – முதல்வரை டேக் செய்து பாலாஜி போட்ட ட்வீட் – அவரின் புகைப்படங்களை பகிர்ந்து பதிலடி கொடுக்கும் நெட்டிசன்கள்.

0
1037
Mkstalin
- Advertisement -

மதுக்கடைகளை மூட சொல்லி பிக் பாஸ் பாலாஜி போட்டு இருக்கும் ட்வீட் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளது. தமிழில் ஐந்து வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருக்கிறது. சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கோலாகலமாக முடிவடைந்தது. இதில் முதல் பரிசை அஸீமும் இரண்டாம் பரிசை விக்ரமனும் வென்றனர்.

-விளம்பரம்-

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முகம் தெரியாத நபர்கள் கூட மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் 4 வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். ஆனால், நிகழ்ச்சிக்கு பிறகு இவர் எந்த ஒரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவர் கடந்த ஆண்டு ஹாட் சடாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்த பாலாஜிக்கு பிக் பாஸ் சீசன் 4 பாலாஜிக்கும் ஏற்பட்ட வித்யாசங்கள் இருந்தது. அதிலும் சனம் ஷெட்டி மற்றும் ஆரி விஷயத்தில் பல முறை பாலாஜி தரம் தாழ்ந்து நடந்துகொண்டார். அதிலும் ஒரு எபிசோடில் சனம் ஷெட்டி அடஜஸ்ட்மென்ட் செய்து தான் அழகி பட்டத்தை வென்றார் என்று பாலாஜி குறிப்பிட்டதாக பெரும் சர்ச்சையே வெடித்தது. இதனால் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் அடக்கியே வாசித்தார் பாலாஜி.

இப்படி ஒரு நிலையில் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஆன்லைன் ரம்மியை விட குடி நிறைய குடும்பங்களை அழிக்கிறது முதலில் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று முதல்வரை டேக் செய்துவிட்டு பதிவு ஒன்றை பதிவிட்ட பாலாஜி அதன் தொடர்ச்சியாக குடியால் ஆதரவற்று இருப்பவர்கள் தமிழ்நாட்டில் என்னைப்போலவே மிக அதிகம். என்னை அரசியலுக்குள் இருக்காதீர்கள் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

பாலாஜியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலர் பாலாஜி, பீரில் குளித்த வீடியோக்களையும் அவர் பப்பில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர். மேலும், நீங்கள் என்ன அடுத்த மீரா மிதுனா என்று கேலி செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு நடிகர்கள் குறித்து பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் ”கவின்,பிரதீப் மாதிரி மற்றவர்களுக்கு முன் உத்தரமான இருக்கும் நபர்களுக்கு வழிவிடுங்கள். தொலைக்காட்சி முதல் சினிமா வரை இனி நேபோடிச நபர்கள் அதிகம் உழைக்க வேண்டும்’ என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், இந்த பதிவை பாலாஜி நீக்கிவிட்டார்.

ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளரான மீரா மிதுன் தமிழ் சினிமாவில் இருக்கும் வாரிசு அரசியல்களால் தான் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சூர்யா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வந்தார். இதனை தொடர்ந்து அவதூறாக பேசியதால் மீரா மிதுன் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீரா மிதுன் போல பாலாஜி முருகதாஸ் வாரிசு அரசியல் முதல் தமிழக அரசியல் வரை பதிவிட்டு இருக்கும் இந்த பதிவுகள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Advertisement