சரவணனுக்கு போன் செய்துள்ள பரணி.! கதறி அழுது சரவணன் சொன்னது இது தானம்.!

0
42579
saravanan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள்கிழமை சரவணன் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் பெண்கள் குறித்து தவறாக பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டு இருந்தார். ஆனால் ,அவர் மன்னிப்பு கேட்டு ஒரு வாரம் ஆன நிலையில் அவர் பேசியதை தவறு என்று கூறி வெளியேற்றப்பட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
saavanan

இந்த நிலையில் சரவணன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் என்ன பேசியுள்ளார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரன பரணி பேட்டி அளித்துள்ளார். இவர் சரவணனுடன் விலை என்ற படத்தில் நடித்துள்ளாராம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள பரணி, சரவணனுக்கு போன் செய்து விசாரித்ததாக கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : சரவணன் வெளியேறியதற்கு சின்மையும் காரணமா.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.! 

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள பரணி, நான் அவர் வெளியே வந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவருக்கு போன் செய்து, என்ன அண்ணே என்று கேட்டேன், அதற்கு வர எனக்கு மூன்று நாளாக ஒன்றும் முடியவில்லை,என் பிள்ளைக்கு ஏதோ ஆகிவிட்டது போல நினைத்து நான் அழுதுகொண்டேஇருந்தேன்னு சொன்னார். அவர் போன் எடுத்ததும் அழுதுவிட்டு, எனக்கு எதாவது வெளியில் கெட்டப்பெயராடா என்று என்னிடம் கேட்டார். ஆனால், நான் அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று கூறினேன்.

அவர் வெளியில் வந்தவுடன் அவரது குழந்தைக்கு உடம்பு சரியெல்லை என்று அவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரது மகனை காண சேலத்திற்கு சென்று விட்டார். அவரை கண்டவுடன் அவரது மகனுக்கு காய்ச்சல் சரியாகியுள்ளது என்று என்னிடம் சொன்னார் என்று பரணி கூறியுள்ளார். அவர் தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார் பின்னர் ஒரு வாரம் கழித்து அவரை வெளியில் அனுப்பியது தவறான விஷயம் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement