சரவணன் வெளியேறியதற்கு சின்மையும் காரணமா.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

0
4286
chinmayi
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த திங்கள் கிழமை சரவணன் வெளியேற்றப்பட்டது தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் சரவணன் கல்லூரி காலத்தில் படிக்கும்போது பெண்களை பேருந்தில் உரசியுள்ளேன் என்று கூறி இருந்து கருத்து பெரும் சர்ச்சையாக பார்க்கப்பட்டது.

இதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க சொன்னர் பிக் பாஸ். நீங்கள் பெண்கள் குறித்து பேசிய விடயம் மிகவும் கண்டிக்கப்படுகிறது. எனவே, நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனால் சரவணன் மன்னிப்பும் கோரி இருந்தார். இருப்பினும் இத்தனை நாட்கள் கழித்து அவரை வெளியேற்ற என்ன காரணம் என்று பலரும் பல்வேறு விதமான காரணங்களை கூறி வருகின்றனர்.

- Advertisement -

சரவணன் வெளியேறியதற்கு பிரபல பாடகி சின்மயும் காரணம் என்று ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சரவணன் குறித்து ட்வீட் செய்திருந்த சின்மயி, பேருந்தில் பெண்களை உரசுவதாக கூறும் ஒரு நபரின் பேச்சை பிரபல தொலைக்காட்சியில் பெருமையுடன் ஒளிபரப்புகிறது அதனை ரசிகர்களும் கைத்தட்டி ஆதரவளிக்கின்றனர். இது என்ன விளையாட்டா? பெண்களிடம் தவறாக  நடப்பவர்களை கண்டு ரசிகர்கள் கைதட்டுவார்களா என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர், நீங்கள் ஒரு ஆணின் வாழ்க்கை மற்றும் தொழிலை நாசம் செய்துவிடீர்கள், இப்போ உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா, என்று சின்மயிடம் மெசேஜ் செய்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள சின்மயி, அவர் வெளியே போனதற்கு நான் காரணம் இல்லை, எனக்கும் அந்த நிகழ்ச்சிக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement