மீரா வெளியபோயிடு வனிதா உள்ள வருணும்.! ஓபனாக பேசிய சீசன் 1 நடிகை.!

0
6800
Meera-cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்களை தேடி பிடித்து பேட்டி கண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Image result for bindu madhavi

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசனில் பங்குபெற்ற பிந்து மாதவி பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியுள்ளார். அதில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தான் இப்போதும் எனது ஃபேவரைட் அந்த சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்கள் அனைவருமே நடிக்காமல் அவர்களது சுய ரூபத்தை தான் காண்பித்தார்கள். ஆனால், அதன் பின்னர் வந்த சீசன்களில் அனைவரும் கேமரா இருப்பதை மனதில் வைத்துக்கொண்டு நடித்தார்கள்.

இதையும் பாருங்க : விஸ்வரூபம் நடிகருக்கு ஹோட்டலில் நடந்த கொடுமை.! விடியோவை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.!

- Advertisement -

தற்போதுள்ள மூன்றாவது சீஸனில் எனக்கு மிகவும் பிடித்த நபர் சாண்டி தான் அவரை எனக்கு தனிப்பட்ட முறையிலும் தெரியும். அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருந்தவரை மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஆனால், அவரின் வெளியேறினார் என்பது தெரியவில்லை. அவர் கண்டிப்பாக வைல்டு கார்டு மூலம் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.

Image result for bindu madhavi

அதேபோல பிக்பாஸ் வீட்டில் இருந்து மீராதான் வெளியில் செல்ல வேண்டும் அவர் தான் பல பிரச்சினைகளை கொண்டு வருகிறார். அதிலும் கடந்த 2 நாட்களாக அவள் செய்த செயல்கள் எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார் பிந்து மாதவி.

-விளம்பரம்-
Advertisement