சூப்பர் சிம்பு, அவங்கள பார்க்க வெய்ட்டிங்- சிம்புவின் வருங்கால மனைவி குறித்து பிக் பாஸ் நடிகை.

0
1196
Simbhu-New
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணத்தால் லாக்டவுன் அறிவிப்புக்கு முன்பு, சிம்பு “மாநாடு ” படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பங்கேற்றார். படத்தின் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாச்சி, இயக்குனர் வெங்கட் பிரபு போன்றவர்கள் பல போராட்டங்களுக்குப் பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கினர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட பின் ஒரு வருடத்திற்கும் மேலாக, எஸ்.டி.ஆரின் ஒத்துழைப்பு இல்லாததால் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியவில்லை.

-விளம்பரம்-
THIS video of Simbu just made 'Kazhugu' actress Bindu Madhavi want ...

மேலும், படத்தின் தயாரிப்பாளரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பல்வேறு பொது இடங்களில் சிம்பு முறையான தேதிகளை வழங்கவில்லை என்றும் கொடுக்கப்பட்ட தேதிகளில் படப்பிடிப்புக்கு வரவில்லை என்றும் புகார் கூறினார். இருப்பினும், சிம்புவின் தாயார் அறிவுறுத்தலின் பெயரில் நடிகர் சிம்பு பயபக்தியோடு சபரி மலைக்கு மாலையெல்லாம் போட்ட பிறகு மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

- Advertisement -

அதே போல சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார் என்று கூறி சிம்புவை பாராட்டினார் சுரேஷ் காமாட்சி. ஆனால், யார் கண்ணு வைத்தது போல கொரோனா பிரச்சனை காரணமாக மற்ற படங்களை போல மாநாடு படத்தின் படபிடிப்பும் நிறுத்த பட்டுள்ளது. தற்போது வீட்டில் இருந்து வரும் சிம்பு அடிக்கடி வீடியோகளை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சிம்பு, வீட்டில் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ‘வரப்போகும் எனது மனைவி என்ன வேலைக்காரியா? அவருக்குப் பிடித்தால் சமைக்கட்டும் இல்லை என்றால் பிடித்த வேலையை பார்க்கட்டும்” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சிம்புவின் இந்த வீடீயோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிந்து மாதவி ‘சரியான அணுகுமுறை சிம்பு.. நாங்கள் அனைவரும் அவளை சந்திக்க காத்திருக்கிறோம் சிம்பு” என பதிவிட்டுள்ளார்.’

-விளம்பரம்-
Advertisement