கால் பண்ணி கூப்டாங்க – மீண்டும் வந்த பிக் பாஸ் அழைப்பு. ஓவியா எடுத்துள்ள முடிவு.

0
797
- Advertisement -

பிக்பாஸ் 1 சீசனில் அதிகம் பேசப் பட்ட பெயர் என்றால் அது ஓவியா அவர்களின் பெயர் தான்.இவருக்கு இந்த சீசன் மூலமே அதிக ரசிகர்களை சம்பாதித்து ஓவியா ஆர்மி என்று இவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாகியது. இவர் தற்போது மீண்டும் பீக் பாஸ் 7 கலந்து கொள்ள இருப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.  விஜய் டி.விகளில் ஒளிபதிவாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் ஆரம்பம் சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது என தகவல்கள் வெளியின.

-விளம்பரம்-


இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் புகழ்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். நாட்டுபுற கலந்து வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த சீனில் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் ருபாய் கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

- Advertisement -

எதிர்பாரத ட்விஸ்ட்:

தற்போது வெளியாக உள்ள பிக்பாஸ் சீசன் 7 குறித்து சில முக்கியமான தகவல்கள் கசிய தொடங்கின. அது என்னவென்றால் வரும் பிக்பாஸ் சீசன் 7-ல் இரண்டு வீடுகள் பயன்படுத்தப்படும் என்ப.து தான். இரண்டு வீடுகளிலும் போட்டியாளர்களை பிரித்து தங்க வைக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் புதிய வீட்டில் புதிய போட்டியாளர்களையும் பழைய வீட்டில் பழைய போட்டியாளர்களை தங்க வைக்க கூடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த இரண்டு வீடு கான்சப்ட் ஏற்க்கனவே வெளியான பிறமொழி பிக் பாஸில் உள்ளது என்றும் தமிழில் முதல் முறையாக முயற்ச்சிக்க படுவதாகவும் சொல்கிறார்கள். அதே நேரம் இரண்டு வீடு கான்செப்ட் போட்டியாளர்களிடம் முன் கூட்டியே அறிவிக்கப்படுமா? அல்லது பங்கேற்று சில நாட்களுக்கு பிறகு இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி அந்த விஷயத்தை கூறுவார்களா என்பது கூறித்து இன்னும் முடிவாகவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.   

-விளம்பரம்-

ஓவியா கூறியது:

நான் இன்னும் பிக் பாஸ் 7 ப்ரோமோ பார்க்க வில்லை. நான் இந்த சீசனிற்கு கலந்து கொள்வேன் என்று நினைக்கிறேன். ஆனால் அது பற்றி எனக்கு சரியாக தெரியவில்லை. எனக்கு பிக் பாஸ் 7 க்கு அழைப்பு வந்தது. தற்போது அது பற்றி பேசிக்கொண்டு வருகிறோம். நான் அது பற்றி யோசிக்கவில்லை.

முதல் சீசனில் பிக் பாஸ் பற்றி ஏதும் தெரியாமல் விளையாடினேன். ஆனால் தற்போது பிக் பாஸ் பற்றி முழுவதும் எனக்கு தெரியும். வெளியே இருந்து பார்த்தால் அது சீரியல் போல இருக்கும் ஆனால் உள்ளே போனால் தான் அதனுடைய அழுத்தம் தெரியும் என்று ஓவியா கூறியிருந்தார்.          

Advertisement