ஜெய் பீம் தேசிய விருது குறித்து பதிவிட்ட அசோக் செல்வன், கேலி செய்த பெண். டென்ஷன் ஆகி திட்டிய அசோக் செல்வன்.

0
1362
- Advertisement -

சோசியல் மீடியாவில் தன்னை ட்ரோல் செய்த பெண்ணை அசோக் செல்வன் கடுமையாக திட்டி இருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக அசோக் செல்வன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். பின் ஹீரோவாக மாறினார். அந்த வகையில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகியிருந்த படம் ஓ மை கடவுளே.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடித்திருந்த படம் போர் தொழில். இந்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து தற்போது அசோக் செல்வன் அவர்கள் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

அசோக் செல்வன் படம்:

இந்தப் படத்தை எஸ் ஜெயக்குமார் இயக்குகிறார். மேலும், இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடுக்ஷன் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த படத்தின் சூட்டிங் போதுதான் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்களாக கூறப்படுகிறது.

அசோக் செல்வன் திருமணம்:

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குனர் பா ரஞ்சித் தான் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் வருகிற செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள தகவல்கள் வெளியானது. திருநெல்வேலியில் உள்ள சேது அம்மன் பண்ணையில் இவர்களுடைய திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற இருப்பதாகவும், இதை அடுத்து செப்டம்பர் 17ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

அசோக் செல்வன் டீவ்ட்:

இந்த நிலையில் தன்னை ட்ரோல் செய்தவருக்கு அசோக் செல்வன் கொடுத்திருக்கும் தக்க பதில் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் 69 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் வென்றவர்களுக்கு அசோக் செல்வன் அவர்கள் ட்விட்டரில் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார்.

அசோக் செல்வன் கொடுத்த பதில்:

இதை பார்த்த பெண்மணி ஒருவர், நீ பார்க்க நல்லா இருக்க. நல்லா நடிக்கிற. அதோடு நிப்பாட்டு என்று கிண்டல் அடித்து கமெண்ட் போட்டு இருக்கிறார். இதை பார்த்து கடுப்பான அசோக் செல்வன், போடி வெண்ண என்று பதில் கொடுத்திருக்கிறார். தற்போது அசோக் செல்வனின் இந்த பதிவை இணையத்தில் வைரலானைத் தொடர்ந்து பலர் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement