கர்ப்பமாக இருப்பதை கணவருடன் சேர்ந்து Cute புகைப்படம் மூலம் அறிவித்த – சன் மியூசிக் Vj தியா. (அ, இவர் கணவர் இந்த கிரிக்கெட் வீரரா)

0
400
Diya
- Advertisement -

ஒரு கால கட்டத்தில் fm மூலம் பாடல்களை கேட்டு கொண்டிருந்த தமிழ் ரசிகர்கள் பின்னர் தொலைக்காட்சியில் போன் செய்து தமக்கு விரும்பிய பாடல்களை கேட்கும் நிகழ்ச்சி ஆரம்பித்த காலகடத்தில் விஜே எனப்படும் வீடியோ தொகுபலளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர்கள். அந்த வகையில் சன் மியூசிக் துவங்கப்பட்ட முதன்முதலில் தமிழில் அறிமுகமான வீடியோ தொகுப்பாளர்கள் சிலர்களில் பிரபலமானார்கள். அந்த வகையில் 2k கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்தவர் தியா.

-விளம்பரம்-

முன்னணி டிவி சேனல்களில் ஒன்றான ‘சன் டிவி’-யில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை ஒரு காமெடி கேம் ஷோ ஒளிபரப்பானது. அந்த காமெடி கேம் ஷோ தான் ‘சூப்பர் சேலஞ்ச்’. இந்த ‘சூப்பர் சேலஞ்ச்’ கேம் ஷோவை தொகுத்து வழங்கியவர் தான் தியா மேனன் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து சன் டிவிலையே ஒளிபரப்பான இன்னொரு கேம் ஷோ ‘சவாலே சமாளி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : அஜித் மேனேஜர் திடீரென வெளியிட்ட கழுதை கதை புகைப்படம் – சிவாவுடன் படம் வேண்டாம் என்று சொன்னதால் அஜித் இப்படி சொல்லிட்டாரோ ?

- Advertisement -

தியா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் :

2017-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான ‘சவாலே சமாளி’ ஷோவையும் தியா மேனன் தான் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை இவருக்கென்று பார்க்கும் ஒரு கூட்டமும் இருந்தது. 2016-ஆம் ஆண்டு கார்த்திக் என்ற கிரிக்கெட் வீரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தொகுப்பாளினி தியா மேனன். திருமணத்திற்கு பின்னர் சிங்கப்பூரில் செட்டில் ஆகினாலும் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தார் தியா.

நீண்ட நாள் காதலருடன் திருமணம் :

தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் பாடல் நடனம் என்று பன்முக திறமை கொண்டவர் தியா. விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற ‘என் ஜன்னல் வந்த காற்றே’, மற்றும் வில்லு படத்தில் இடம்பெற்ற ‘தீம்தனக்கா தில்லானா ’போன்ற சில பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

கர்ப்பமாக இருப்பதை அறிவித்த தியா :

இந்த திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் டிவி பக்கம் வரமால் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார் தியா. இருப்பினும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் தியா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் தன்னை தனது கணவர் கட்டிப்பிடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புதிய உறுப்பினர் :

மேலும் அந்த பதிவில் ‘எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் வர இருக்கிறார் என்று பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கும், அவரது பதிவுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தற்போது கர்ப்பமாக இருப்பதால் மீண்டும் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொள்ள இருக்கிறார். மேலும், தனக்கு பிறக்கப்போகும் முதல் குழந்தையை ஆவலுடன் எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கிறார் தியா.

Advertisement