போட்டியாளர்களை கண் கலங்க வைத்த அழைப்பாளர்கள்.! அப்படி யார் கால் செய்துள்ளனர்.!

0
7336
kavin-mugen
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 61 நாளை நிறைவு செய்துவிட்டது. இத்தனை நாள் கடந்த நிகழ்ச்சியில் இதுவரை எந்த ஒரு சுவாரசியமான டாஸ்க்கும் வைக்கப்படவில்லை. இதுவரை 9 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேறிய வனிதாவை மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளராக மீண்டும் கொண்டு வந்துள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், இன்னும் இரண்டு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளனர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டாக்கில் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட சேரன், சாண்டி, லாஸ்லியா மூவரில் நேற்று சீட்டுக் குலுக்கிப் போட்டு சேரன் அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் பாருங்க : நின்று போன திருமணம்.! தெய்வமகள் சீரியல் நடிகைக்கு திருமணம்.! மாப்பிள்ளை இவர் தானம்.! 

- Advertisement -

எனவே, அடுத்த வாரம் நடைபெறும் நாமினேஷினில் சேரனை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இது ஒருபுறமிருக்க கடந்த வாரம் நடந்த நாமினேஷனில் சாண்டி, தர்ஷன்,சேரன், கஸ்தூரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நேற்றுடன் ஓட்டிங் முடிந்த நிலையில் கஸ்தூரி தான் மிகவும் குறைவான வாக்குகள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் கவின் மற்றும் முகென் இருவருக்கும் பிரூட்டி காலர் ஆப் தி வீக் மூலம் யாரோ போன் செய்துள்ளனர். அந்த அழைப்பை கேட்ட இருவரும் கண் கலங்கி அழுதுள்ளனர். ஒருவேளை அது அவர்களது ஆசிரியராக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-


Advertisement