பிக் பாஸ் வீட்டில் இருக்கும் 60 கேமராக்கள் – ஒரு கேமராவின் விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா ?

0
2730
biggboss-camera
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகி வரும் மிகப் பிரபலமான நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என இந்தியா முழுவதும் உள்ள பல மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அதிலும் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் இந்த முறை அதிகமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

குறிப்பாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி முதன் முறையாக திருநங்கை நமிதா மாரிமுத்துக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார்கள். ஆனால், சிலநாட்களிலேயே நமிதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணத்தினால் வெளியேறினார். மேலும், கடந்த வாரம் முதல் எலிமினேஷன் நடந்தது. அதில் நதியா சாங்க் வெளியேறியது அனைவருக்கும் தெரிந்ததே. மேலும், பிக்பாஸ் வீடு என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற டயலாக் தான்.

- Advertisement -

ஏன்னா, அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதும் கேமராக்கள் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் வைத்திருக்கும் கேமரா விலையின் பற்றிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யூடியூப் பிரபல ஒருவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவின் விலை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமராவின் விலை USA டாலர் மதிப்பில் சுமார் 8000 டாலர். அதாவது இந்தியாவின் பண மதிப்பில் ஒரு கேமரா 6 லட்சம் ரூபாய்.

பிக் பாஸ் வீட்டில் 60 கேமராக்கள் இருக்கிறது என்று சொன்னால் இந்தியாவின் மதிப்பில் 3.6 கோடி ரூபாய் கேமராக்கு மட்டும் விஜய் டிவி செலவு செய்து இருக்கிறார்கள். இந்த கேமராவின் பெயர் Sony BRC– H900. இந்த கேமரா ரிமோட் கண்ட்ரோல். இந்த கேமராவின் எம்பியை கேட்டால் எல்லாருமே சாக் ஆகி விடுவார்கள். நம்ம போன்லயே 64, 108 mp இருக்கும். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமரா ஓட மெகா பிக்சல் 2.7 தான். இந்த கேமராவை பயன்படுத்தி ஜூம், ரொட்டேட் எல்லாம் பண்ணிக்கலாம். இது பாக்குறதுக்கு ரொம்ப சின்னதாக தான் தெரியும். ஆனால், இதனுடைய வெயிட் 5 கிலோ. இந்த மாதிரி மல்டிபிள் கேமராவை ஒரே இடத்தில் வைத்து பயன்படுத்தலாம் என்று கூறியிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement