Corona Lockdown : 4 மணி நேரம் 500 குரங்குகளுக்கு உணவளித்த பிக் பாஸ் நடிகர். வைரலாகும் வீடியோ.

0
7555
actor
- Advertisement -

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து இதுவரை 2301 பேர் பாதிக்கப்பட்டும், 56 பேர் பலியாகியும் உள்ளனர். இதனால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவினால் நாட்டில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

ஆறு அறிவு கொண்ட மனிதர்கள் முதல் ஒன்று,இரண்டு அறிவு கொண்ட வாய் இல்லாத ஜீவன்களும் பரிதவித்து வருகின்றது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சுற்றுலாத்தலங்கள், பொதுமக்கள் நடமாடும் இடங்கள், போக்குவரத்து, கடைகள், கோயில்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இடங்களில் எல்லாம் இருக்கும் வாயில்லா ஜீவன்களின் நிலை திண்டாட்டமாக உள்ளது. அந்த வகையில் நந்தி மலையில் உள்ள குரங்குகள் உணவுக்காக பரிதவித்து வருவதை அறிந்து நடிகர் நந்தன் உணவு அளித்து உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட நடிகரான சந்தன் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். மேலும், இவர் கன்னடத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை என்னும் சுற்றுலா தலம் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இந்த மலையில் 500-க்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளது. அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள் அங்கு வசித்து வரும் குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவு கிடைக்காமல் பரிதவித்து வந்தன.

-விளம்பரம்-

இதுபற்றி அறிந்த கன்னட நடிகர் சந்தன்குமார் என்பவர் நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கி கொடுத்து உள்ளார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம் வழங்கியதை நடிகர் சந்தன்குமார் போட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது, சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம். நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?. மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதானது என்று குறிப்பிட்டிருந்தார். சந்தன்குமாரின் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

தற்போது கொரோனா வைரஸ் கொத்து கொத்தாக மக்களை கொன்று வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் பயத்தின் விளிம்புக்கு சென்று விட்டார்கள். நாளுக்கு நாள் இந்த கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது.

Advertisement