இன்று முதல் எங்கும் பிக் பாஸ் பேச்சாகத்தான் இருக்கும். சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களும் கருத்து கந்தசாமிகளும் தெறிக்க விட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வீட்டுக்குள் பேசப்படும் புறணி, பொய்களைக் கேட்க ஆண்களும் பெண்களும் குடும்பத்தோடு உட்கார்ந்துவிடுவார்கள். ஆனால், ‘பிக் பாஸ்’ ஷோ தொடங்குவதாலேயே தங்கள் தூக்கம் தொலையப்போவதாகச் சொல்கிறார்கள் சில டி.வி நட்சத்திரங்கள். காரணம், இவர்கள் பிக் பாஸ் ஒளிபரப்பாகும் சேனலின் போட்டி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக்கொண்டிருப்பவர்கள்.
டி.வி நேயர்கள், ‘பிக் பாஸ்’ பக்கம் போகாமல் தடுக்க என்ன செய்யலாம்னு மத்த சேனல்கள் தீவிரமா யோசிட்டிருக்காங்க. என்னோட சீரியல் ஒளிபரப்பாகிற சேனல்ல பிரைம் டைம்ல மட்டும் வார இறுதி நாள்கள்லயும் சீரியல்களை ஒளிபரப்பலாம்னு முடிவெடுத்திருக்காங்க. அதாவது, இதுவரை சனி, ஞாயிறு லீவு கிடைச்சிட்டிருந்த சீரியல்களுக்கு இன்னொரு மூணு மாசத்துக்கு அந்த லீவு கட். இதனால, எங்களோட ஷூட்டிங் நாள்களும் அதிகமாகுது. என்ன பண்றது? சமாளிச்சுத்தான் ஆகணும்” என்கிறார் ‘செம்பருத்தி’ ஷபானா.
இரண்டாமிடத்தில் இருந்த ‘செம்பருத்தி’ ‘யாரடி நீ மோகினி’யைப் பின்னுக்குத் தள்ளி சமீபத்தில்தான் ரேட்டிங்கில் முதலிடத்துக்கு வந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
‘செம்பருத்தி’ மட்டுமில்லாமல் ‘யாரடி நீ மோகினி’, ‘பூவே பூச்சூடவா’ தொடர்களும் பிக் பாஸ் முடியும் வரை சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறாமல் இருக்க அவர்களுக்கு மக்களாகிய நீங்கள் வாக்கு அளிக்க வேண்டும்.
போட்டியாளர்களுக்கு வாக்கு அளிக்க “Bigg Boss Vote Tamil” என்ற பக்கத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.