அவரை வைத்து நான் பெயர் வாங்கணும் அவசியம் இல்ல. கவின் மற்றும் லாஸ் குறித்து பேசிய சேரன்.

0
2441
cheran
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு காதல் கதைகள் ஓடியது. ஆனால், கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் பிக் பாஸ் வீட்டின் ஹைலைட்டாக இருந்து வந்தது. கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த வரை இவர்களது உறவை பற்றி அதிகம் கவலைப்பட்டது சேரன் தான். சேரன், லாஸ்லியாவின் ஒரு தந்தை போலத்தான் பழகி வந்தார், இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த சீசன் ஆரம்பத்திலிருந்தே கவின் மற்றும் சேரனுக்கு அவ்வளவு ராசியாக ஒத்துப்போகவில்லை.

-விளம்பரம்-
Cheran

இவர்கள் இருவரும் நிறைய பேசியது கூட கிடையாது. அதே போல லாஸ்லியா சேரன் பற்றி சொன்னால் கவினுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால் லாஸ்லியாவிடம் இருந்து கவினை பிரிக்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், இறுதிவரை லாஸ்லியா, சேரன் மற்றும் கவின் இடையே இருந்த உறவினை தொடர்ந்து தான் வந்தார். கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சேரனை தொடர்ந்து கவிலியா ஆர்மி திட்டி தீர்த்து வந்தது.

இதையும் பாருங்க: காமெடி நடிகர் கிங் காங்கின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

- Advertisement -

இதனால் கடுப்பான சேரன், தனது சமூக வளைதள பக்கத்தில் கவின் லாஸ்லியா விசயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை.அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் ப்ரச்னைக்கு வரவேண்டாம். நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம் என்று பதிவிட்டிருந்தார்.

cheran

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள சேரன், என்னை தற்போது அனைவரும் சேரப்பா என்று அழைப்பதற்கு காரணம் லாஸ்லியா தான். ஒரு அப்பாவாக நான் அவருக்கு அக்கறை செலுத்தினேன். இடைப்பட்ட காலங்களில் லாஸ்லியாவிற்கு சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அவர் எப்போதும் என்னை விட்டு கொடுத்தது இல்லை. ஒரு கட்டத்தில் லாஸ்லியாவிற்கும் கவினுக்கும் ஒரு ஈர்ப்பு வந்தது. அது அவர்களின் வயதின் வெளிப்பாடு. ஆனால், அதனை அவர்களது பெற்றோர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் அவர்களை எப்படி பாதிக்கும் என்ற பயம் தான் எனக்கு இருந்தது. இவர்கள் செய்யும் சில விஷயங்கள் வெளியே இருக்கும் பெற்றோர்கள் எந்த அளவிற்கு சங்கடங்களை சந்திப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், லாஸ்லியா அதனை வைத்து நான் பெயர் வாங்கிவிடுவதாக நினைத்தார். பெயர் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது நான் படங்களில் பெயர்களை வாங்கிவிட்டேன்.

-விளம்பரம்-
Image result for kavin cheran"

நான் கவின் மற்றும் லாஸ்லியா காதலுக்கு தடையாக இருப்பதாக 15 முதல் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் நினைக்கிறார்கள். ஏன் என்றால் அந்த வயசு அப்படி. நானும் அந்த வயதில் காதலித்து இருக்கிறேன் அப்போது எனக்கு எடுத்து சொல்பவர்களை கண்டு நான் வருத்தப்பட்டு இருக்கிறேன். அதே மனநிலைதான் இந்த வயதில் இருக்கும் இளைஞர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. இருப்பினும் ஆபாசமாக திட்டுவது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இவை அனைத்திற்கும் காலம்தான் ஆசான் என்று கூறியுள்ளார்.

Advertisement