காமெடி நடிகர் கிங் காங்கின் அழகிய குடும்பத்தை பார்த்துள்ளீர்களா. புகைப்படம் இதோ.

0
115881
king kong

தமிழ் சினிமா உலகின் நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு மேல் தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. இவர் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர். ஏன்னா,அந்த அளவிற்கு இவர் மக்களிடையே நல்ல வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றவர். மேலும், இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இருக்கும்.

நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து அசத்தியவர். அதுமட்டும் இல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும், இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது. மேலும், இந்த படத்திற்கு பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன.

- Advertisement -

இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். இதனைத்தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள். மேலும் நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளார்கள். மேலும்,இந்த தகவல் பல பேருக்கு தெரியாத விஷயம். பின்னர் சில காலங்களில் அவர் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். நடிகர் கிங் காங் அவர்கள் மீண்டும் பிரபுதேவா இயக்கி தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘போக்கிரி’ படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பினார். நடிகர் கிங்காங் அவர்கள் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார்

தற்போது இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய குடும்பப் படத்தை பார்க்கும் போது அவருடைய மகன் அப்படியே அவரை போலவே உள்ளார் என்று கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகர் கிங் காங்குக்கு இவ்வளவு அழகான குடும்பமா!! என்றும் வியப்பில் உள்ளனர் நெட்டிசன்கள். இவருடைய பெரிய பெண்ணின் பெயர் கீர்த்தனா. அவர் தற்போது 12-ம் வகுப்பு படிக்கிறார். அடுத்த பெண் பெயர் சக்தி பிரியா. கடைக் குட்டி தான் முருகன்.

-விளம்பரம்-
Advertisement