25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர் – ஆட்டோகிராப் புகழ் கோமகன் இறப்பிற்கு சேரன் உருக்கம்.

0
481
cheran
- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி ஒரு போறாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்களின் எதிர்பாராத இழப்பு திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் பாண்டு இன்று (மே 6) காலமாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ஆட்டோகிரபாப் பட புகழ் பாடகர் கோமகன் கொரோனா தொற்றால் காலமாகியுள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற ’ஒவ்வொரு பூக்களுமே’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன்.  பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா.விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்திருந்தது.

இதையும் பாருங்க : மூன்று குழந்தைகள், லண்டலின் செட்டில் ஆன ஈரம், யூத் பட நடிகை – எப்படி இருக்காங்க பாருங்க.

- Advertisement -

இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் ‘மனிதா உன் மனதை கீரி விதை போடு உரமாகும் ‘ என்று உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். பல்வேறு மேடை பாடல்களை பாடி வந்த இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுத்தவர் சேரன் தான். மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்திருந்தது.

இப்படி ஒரு நிலையில் இவர் கொரோனா தொற்று காரனமாக இன்று காலமாகியுள்ளார். கோமகனின் இறப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன், வார்த்தைகள் இல்லை… மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்… அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும் என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement