உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் தலை விரித்து ஆடி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் ஆதிக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியிலும், கவலையிலும் உள்ளார்கள். கொரோனா பரவலை தடுக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் மருத்துவ தேவைகள், அத்தியாவசிய மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியே வர வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புகள் சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்தாலும் சினிமா படப்பிடிப்புகளுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் பல்வேறு சினிமா நடிகர் நடிகைகள் வீட்டில் தான் முடங்கியுள்ளனர். இருப்பினும் சினிமாவிற்கு போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் ஊரடங்கிற்கு பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது அலுவலகத்திற்கு வந்துள்ளதாக சில புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், நீண்ட இடைவெளிக்கு பின் அலுவலகம் வந்து வேலை பார்க்க துவங்கியாச்சு… எவ்வளவு சுகமா இருக்கு.. இத்தனை நாள் முடங்கி கிடந்த நாம் இனி வெளிச்சத்தை நோக்கி நடக்கலாம்.. இது எனக்கு மட்டுமல்ல… எல்லோருக்குமானது. விரைவில் சகஜ நிலைக்கு திரும்புவோம் என நம்பி களத்தில் இறங்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.