பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய படம் எடுப்பது குறித்து கேட்ட ரசிகருக்கு சேரன் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. பெரியார், அம்பேக்த்தார் போன்ற தலைவர்களை தொடர்ந்து தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமும் தயாராகி வருகிறது.இந்நிலையில் ஈழ தமிழர்களின் தலைவர் என்று கருதுத்தப்ட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பிரபல நடிகர் பாபி சிம்ஹா, பிரபாகரனின் கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார்.

மேலும், அந்த படத்திற்கு ‘சீரும் புலி’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டது. இந்தப் படத்தை ஸ்டுடியோ 18 நிறுவனம் தயாரிக்கிறது. ‘நீலம்’, ‘உனக்குள் நான்’, ‘லைட் மேன்’ ஆகிய படங்களை இயக்கிய ஜி.வெங்கடேஷ்  குமார் இதனை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த 2018 ஆம் ஆண்டே வெளியானது ஆனால், அதன் பின்னர் இந்த படத்தை பற்றிய தகவல் வெளியாகிவில்லை.

இதையும் பாருங்க : தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் ராதிகா – இது வரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் பிரபல இயக்குனரான சேரனிடம், ட்விட்டரில் ரசிகர் ஒருவர், தலைவர் பிரபாகரனை மையப்படுத்தி இரு திரைப்படம் எடுக்கலாமே சேரன் சார் என்று கேட்டிருந்தார். இதற்கு சேரன், தயாரிப்பாளர் ? என்று பதில் அளித்திருந்தார். அதற்கு அந்த ரசிகரோ, சுரேஷ்காமாட்சி (மாநாடு பட தயாரிப்பாளர் ) அண்ணனிடம் கேளுங்கள்,நாங்களும் உள்ளோம் என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சேரன், பேசுவோம் பிறிதொரு சந்தர்ப்பத்தில்.. அது பெரும் வேலை.. சிறப்பாக செய்ய அதிகம் மெனக்கெட வேண்டும்… போற போக்குல எடுக்கும் படம் அல்ல என்று கூறியுள்ளார். இறுதியாக சேரன் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கி இருந்தார் அதன் பின்னர் எந்த படத்தையும் இயக்கவில்லை. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் சேரன, விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு படத்தை இயக்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆனால், அது இன்னும் நடக்கவில்லை.

Advertisement
Advertisement