இறுதி நாளில் நடைபெற்ற மாற்றம்.! பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேற போவது இவரா ?

0
46964
Sherin-Cheran
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எலிமினேஷன் இல்லை என்பதால் ரசிகர்கள் கொஞ்சம் ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். அதுபோக வனிதா வெளி வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த வாரம் தலைவராக நியமனம் செய்து அந்த ஆசையில் மண் அள்ளிப் போட்டு விட்டார் பிக் பாஸ்.

-விளம்பரம்-
Cheran

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின், முகென் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும், இந்த வாரம் வனிதா தலைவர் என்பதால் அவரை நாமினேட் செய்யமுடியவில்லை. அதே போல அவருக்கு ஒரு சிறப்பு பவரும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : மௌனகுரு இயக்குனரின் அடுத்த படைப்பு.! மகாமுனி படம் எப்படி இருக்கு.! 

- Advertisement -

ஆனால், அது என்ன பவர் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஒரு வேலை அது என்ன என்பது இன்று தெரிய வரலாம். தற்போது கிடைத்த தகவலின்படி இந்த வார ஓட்டிங்கில் கவினுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறதாம். மேலும், ஷெரின் தான் மிகவும் குறைவான வாக்குகளை பெற்று வருகிறாராம்.

Sherin

நமது Behindtalkies இணையத்தளத்தில் நடந்து வரும் ஓட்டிங்கிலும் சரி, மற்ற சில தனியார் இணையத்தளத்தில் நடத்தப்பட்டு வரும் ஓட்டிங்கிலும் சரி,கவின் தான் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். மேலும், கடந்த நான்கு நாட்களாக சேரன் ஷெரின் தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால், இறுதி நாளான இன்று சேரன் இறுதி இடத்தில் இருக்கிறாராம்.

-விளம்பரம்-

சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் கடைசி இடத்தை பிடிப்பதற்கான போட்டி நடந்து கொணடே வந்தது. தற்போதைய நிலவரப்படி சேரன் தான் ஷேரினை விட கொஞ்சம் கம்மியான வாக்குகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே, இந்த வாரம் சேரன் வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement