மௌனகுரு இயக்குனரின் அடுத்த படைப்பு.! மகாமுனி படம் எப்படி இருக்கு.!

0
2460
magamuni
- Advertisement -

தமிழில் மௌனகுரு என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சாந்தகுமார் ‘மகாமுனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப்படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-
Related image

கதைக்களம்:

- Advertisement -

ஒரே வயிற்றில் பிறந்த ஒரே தோற்றம் உடைய இரண்டு ஆர்யாவும் ஒருவருக்கொருவர் யாரென்றே தெரியாமல் வெவ்வேறு நபர்களிடம் வாழ்ந்து வருகின்றனர். மகாதேவன் மற்றும் முனிராஜ் என்ற இரு கதாபாத்திரங்களை சுற்றி நடக்கும் ஒரு கதைதான் இந்த மகாமுனி இந்த இரண்டு கதாபாத்திரத்திலும் ஆர்யா அருமையாக நடித்துள்ளார்.

இதையும் பாருங்க : மீண்டும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த கவின்.! இத்தனை லட்சம் ஆதரவாளர்களா.!

இதில் மகாதேவன் ஒரு கார் ஓட்டுனராக பணிபுரிந்து பின்னர் சிறப்பாக ஆட்களை எப்படி தூக்க வேண்டும் என்று தெளிவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுக்கும் ஒரு நபராகவும், அடியாளாகவும் இருந்து வருகிறார். இவரது மனைவியாக இந்துஜா நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for மகாமுனி

இந்த ஆர்யாவிற்கு நேரெதிராக முனிராஜ் என்ற கதாபாத்திரத்தில் வரும் மற்றுமொரு ஆர்யா தாழ்த்தபட்ட சமூகத்தில் வளர்ந்துவருபவராகவும் மிகவும் சாதுவான நபராகவும் ஜாதிகளை அகிம்சை வழியில் எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு நபராகவும் நடித்துள்ளார். அவரது தோழியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் கர்மா ஒரு பூமராங் போன்ற பல பழமொழிகளை நாம் கேட்டிருப்போம். அந்த பழமொழிகளை மையமாகக் கொண்டதுதான் இந்த மகா முனி திரைப்படம். வெவ்வேறு கோட்டில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் போது என்ன நடக்கிறது. இவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்புதான் என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை. அதனை மௌனகுரு பாணியில் மிகவும் சுவாரசியமாகவும் உரிமையுடன் அவள் பார்க்கும் ஒரு படமாகவும் கொடுத்துள்ளார் இயக்குனர்.

ப்ளஸ் :

  • இயக்குனர் கதையை கையாண்டுள்ள விதம்
  • இரண்டு வேடங்களையும் அருமையாக வித்தியாசப்படுத்தி காண்பித்துள்ள ஆர்யா
  • இந்துஜாவின் எதார்த்தமான நடிப்பு
  • அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு
  • தமனின் இசை

மைனஸ் :

  • படத்தின் இரண்டாம் பாதியில் சிறுது நேரம் இருக்கும் தொய்வு
  • படத்தை சிறிது நேரம் பார்க்காமல் விட்டால் படத்தில் குழப்பம் ஏற்படும்
  • நிறைய கதாபாத்திரங்களால் ஏற்படும் சிறிது குழப்பம்

இறுதி அலசல் :

தற்போது உள்ள தமிழ் சினிமாவில் ஒரு ஆழமான திரைக்கதையை எடுத்து அதனை படமாக கொடுப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அந்த முயற்சியில் இந்த படத்தில் மீண்டும் வெற்றியை கண்டுள்ளார் இயக்குனர் சாந்த குமார். மேலும், திருமணத்திற்கு பின்னர் ஆர்யா சந்தித்துள்ள முதல் வெற்றிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு கிடைத்த மேலும் ஒரு சிறப்பான அங்கீகாரம் என்றே கூறலாம்,

Advertisement