பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தனது படத்தின் ட்ரைலர் அறிவிப்பை வெளியிட்ட சேரன்..

0
1434
Cheran
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் நடிகராகவும், திரைப்பட இயக்குனராகவும் வலம் வந்தவர் சேரன். சில காலங்களுக்கு பிறகு சேரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இதுவரை பிக்பாஸ் வீட்டில் கலந்துகொண்ட கலந்துகொண்ட வயது அதிகம் உள்ள போட்டியாளர்களில் 90 நாட்கள் வரை பயணம் செய்தவர் சேரன் தான். பொதுவாகவே பிக்பாஸ் வீட்டில் வயதில் அதிகம் உள்ளவர்கள் கலந்து கொண்டால் 50 நாட்களுக்குள்ளேயே எலிமினேட் செய்யப்படுவார்கள். ஆனால், சேரனின் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் தான் 90 நாட்கள் வரை பயணம் செய்ய காரணமாக இருந்தது என்று கூட கூறலாம். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரன் ஒரு நல்ல மனிதர் என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் எடுத்தார்.மேலும், சேரன் ஒரு அப்பாவாக, நண்பராக, அண்ணனாகவும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் விளங்கினார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லைங்க லாஸ்லியா விஷயத்தில் மூலம் தான் சேரனுக்க மக்களிடையே மதிப்பும் மரியாதையும் கூடியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஒரு தந்தை எப்படி? இருக்கணும் என காட்டினார். ஆனால், சேரன் இறுதி கட்டத்திற்கு செல்லாதது ரொம்ப கஷ்டமாக இருந்தது என ரசிகர்கள் இணையங்களில் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் சேரன் எப்பவுமே கிராமப்புறங்கள் சம்பந்தமான கதைகளையும், குடும்ப கதைகளையும் தான் அதிகம் கொடுத்துள்ளார்.அதிலும் தற்போது கூட ஒரு புது படம் எடுக்க உள்ளார் என்ற தகவலும் வந்து உள்ளது.இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சேரனின் “ராஜாவுக்கு செக்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்துள்ளது.ஆனால், இந்த ராஜாவுக்கு செக் படத்தின் டிரைலரை 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியிட்டுள்ளார்கள். ஆனா, அப்போது அந்த அளவிற்கு இந்த படத்திற்கு வரவேற்பு இல்லை என்று கூறியிருந்தார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கிடைத்த ஆதரவை வைத்து இப்போ இந்த படத்தின் ட்ரைலரை மீண்டும் வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.

இதையும் பாருங்க : பிக் பாஸ் கொண்டாடத்திற்காக டான்ஸ் ரிகர்சலில் இருக்கும் லாஸ்.. என்ன பாடலுக்கு நடனமாடுகிறார் பாருங்க..

- Advertisement -

இந்த ‘ராஜாவுக்கு செக்’ படத்தை பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் சேரன் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.அதோடு ஜெயம் ரவியின் ‘மழை’ படத்தை இயக்கிய சாய்ராஜ்குமார் அவர்கள் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து கனாக்காணும் சீரியலின் மூலம் பிரபலமானவரும், சுண்டாட்டம், பட்டாளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவருமான நடிகர் இர்பான் தான் இந்த படத்திற்கு வில்லனாக நடித்து உள்ளார். இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளது தெலுங்கில் பிரபலமான இசையமைப்பாளர் வினோத்ய ஜமானியா.
இந்த படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகிறார்.இதனைத் தொடர்ந்து படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் எம்.எஸ் பிரபு.

ராஜாவுக்கு செக்

இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை டேஞ்சர் மணி என்பவர் தான் கையாண்டுள்ளார். இந்த படம் எமோஷனல், திரில்லர், ஆக்ஷன், காமெடி என பல கலவைகளை கொண்ட படமாக இருக்கும் என படக்குழுவினர் கூறினார்.இந்நிலையில் இன்று இந்த படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளார்கள் படக்குழுவினர். இதற்காக சேரன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது, தந்தை மகள் மீது காட்டும் பாசத்திற்கு அளவு ஏதும் இல்லை. அந்த பாசத்தை காலங்கள் தான் சொல்லும். எது உண்மையான பாசம்? எவ்வளவு ஆழமான பாசம்? என்பது என்று. அதே சமயத்தில் இந்த ‘ராஜாவுக்கு செக் ‘ என்ற படத்தின் இசை வெளியீட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் என் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம். சரண் ஆகிய அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement