பிக் பாஸ் கொண்டாடத்திற்காக டான்ஸ் ரிகர்சலில் இருக்கும் லாஸ்.. என்ன பாடலுக்கு நடனமாடுகிறார் பாருங்க..

0
9206
losliya

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தர்ஷன் முகென், லாஸ்லியா ஆகிய மூவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் ரசிகர்கள் யார் என்று அறியாமல் தான் இருந்து வந்தார்கள். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் இவர்கள் மூவரும் ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறிவிட்டார்கள். இதில் இலங்கை செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலேயே இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே இவருக்கு என்று பல்வேறு சமூக வலைத்தளத்தில் பல்வேறு ஆரமிக்கல் துவங்கப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் இவரை சொற்பமான நபர்கள்தான் சமூகவலைதளத்தில் பின்தொடர்ந்து வந்தார்கள். ஆனால், தற்போது இவரது சமூக வலைதள பக்கத்தில் இவர் சிறியதாக ஒரு புகைப்படத்தை போட்டாலும் அதை இலட்சக்கணக்கானோர் லைக் செய்து விடுகிறார்கள். அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். இதனால் சமூகவலைதளத்தில் பார்த்துப் பார்த்து மிகவும் குறைவான பதிவுகளை தான் போட்டு வருகிறார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் தான் மிகவும் ஹைலைட்டாக இருந்து வந்தது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிறைவடைந்து இதுவரை இன்னும் இவர்கள் இருவரும் சந்திக்கவில்லை. கவின், பாய்ஸ் கேங்கில் உள்ள அனைவரையும் சந்தித்து தனது புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதேபோல லாஸ்லியாவும் சாண்டி, சேரன் பாத்திமா பாபு, அபிராமி போன்றவர்களை சந்தித்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். ஆனால், கவின் மற்றும் லாஸ்லியா இதுவரை எந்த ஒரு சந்திப்பிலும் சந்திக்காமல் இருக்கின்றனர். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : பிகிலில் ராயப்பன், மைக்கேல் தெரியும்.. அப்போ இந்த C என்பது யாருடைய பெயர் தெரியுமா ?

- Advertisement -

இந்த நிலையில் லாஸ்லியா பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காகரிகர்சலில் ஈடுபட்டுள்ளார். அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போது கவின் இவருக்காக பாடிய அடியே லாஸ்லியா பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும், லாஸ்லியாவிற்கு நடனம் கற்றுக் கொடுக்கும் பலரும் லாஸ்லியாவுடன் டிக் டாக் செய்து தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவருக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் கிறிஸ்டியானோ அருள் என்பவர் லாஸ்லியாவுடன் ரிகர்சலில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்த பதிவிற்கு கீழ் கவினை டேக் செய்து வெறும் ஃபன் காக தான் மன்னித்துவிடுங்கள் சகோதரா என்று கமென்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-

இந்தப் பதிவுக்கு கீழ் லாஸ்லியா மற்றும் கவினின் பல்வேறு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும்,, லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் இணைந்து பிக்பாஸ் கொண்டாட்டத்தில் நடனமாட வேண்டும் என்றும் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் தான் வி ஆர் தி பாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தது. அதில் பிக் பாஸ் வீட்டில் வி ஆர் தி பாய்ஸ் கேங்கில் இருந்த முகென், தர்ஷன், கவின், தாண்டி ஆகியோர் வந்திருந்தனர். ஆனால், இதே குழுவில் இருந்த லாஸ்லியா மட்டும் வரவில்லை. எனவே பிக்பாஸ் கொண்டாட்டத்திலாவது கவினுடன் இணைந்து லாஸ்லியா ஆடுவாரா என்று கவிலியா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்

Advertisement