பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல் கதை தான் ஹைலைட்டாக இருந்தது. கவின் மற்றும் லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருந்த போது இவர்களது உறவை பற்றி அதிகம் கவலைப்பட்டது சேரன் தான். சேரன் அவர்கள் லாஸ்லியாவிற்கு ஒரு தந்தை போலத் தான் பழகி வந்தார். அதே போல லாஸ்லியா சேரன் பற்றி சொன்னால் கவினுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனால் லாஸ்லியாவிடம் கவினை பிரிக்க சேரனும், சேரனிடம் இருந்து லாஸ்லியாவை பிரிக்க கவினும் பல்வேறு செயல்களை செய்து வந்தார்கள். ஆனால், சேரனின் உண்மையான பாசம் லாஸ்லியாவிற்கு தெரியாமல் போனது. அதே போல லாஸ்லியா, எப்போதும் சேரனை, சேரப்பா சேரப்பா என்று தான் அழைத்து வந்தார்.
இதையும் பாருங்க : டிக்கிலோனா படத்தின் மாறனின் Deleted வீடியோ – இந்த காமெடிய போய் தூக்கி இருக்காங்களே.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சேரனை மறந்துவிட்டார் லாஸ்லியா. சமீபத்தில் சென்ற சேரன் பிறந்தநாளுக்கு கூட லாஸ்லியா வாழ்த்து சொல்லவில்லை. அவ்வளவு ஏன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த விருது விழா ஒன்றில் லாஸ்லியாவிடம் தொகுப்பாளர் ஒருவர் சேரன் பிறந்த நாள் எப்போது என்று லாஸ்லியாவிடம் கேள்வி கேட்டு உள்ளார்கள். அதற்கு ஒரு நிமிடம் யோசித்து இறுதியில் எனக்கு அவருடைய பிறந்த நாள் தேதி தெரியாது என்று கூறி விட்டார்.
அதே போல கடந்த ஆண்டு ட்விட்டரில் ரசிகர் ஒருவர், சேரனை லவ் யூ சேர்ப்பா என்று அழைத்து இருந்தார். அதற்க்கு பதில் அளித்த சேரன். தயவு செய்து என்னை சேரப்பா என்று அழைக்காதீர்கள். அது பெரிய பேரப்பா. அந்த பெயர் எனக்கு பிடிக்கவில்லை. என்னை சேரன் அல்லது சேரன் சார் என்று அழைத்தால் போகும் என்று கூறி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நேற்று (செப்டம்பர் 17) லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் முதல் படமான ப்ரண்ட்ஷிப் படம் வெளியாகி இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘வாழ்த்துக்கள் மகளே… உங்கள் கனவுகள் நனவாகி உங்களின் லட்சியங்கள் வெல்லட்டும்.
உனது குடும்பத்திற்காகவே இந்த முதல் திரைப்படத்திலும் தொடர்ந்து வரும் படங்களிலும் நற்பெயர் பெற்று நீ வெல்வாய் என்ற நம்பிக்கை உண்டு.. இனி நல்லதே நடக்கட்டும்’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘அந்தப் பொண்ணு தான் உங்களை மதிக்கவே மாட்டீங்களே நீங்க ஏன் இப்படி இருக்கீங்க இந்த மாதிரி பொண்ணுக்கு சப்போர்ட் பண்றதை விட்டு ஒரு ஏழைப் பெண்ணுக்கு முடிஞ்ச ஹெல்ப் பண்ணுங்க புண்ணியமாவது வரும் உங்க பொண்ணுங்க உங்களை திட்ட மாட்டாங்களா.ஒருவேளை நான் உங்கள் மகளாக இருந்தால் இந்த பதிவை போட்டதற்கு உங்கள நல்லா திட்டி இருப்பேன்’ என்று கூறி இருந்தார்.
இதற்க்கு பதில் அளித்த சேரன்’அதெல்லாம் விட்றுங்க.. ஷோ ல என்ன பண்ணனும்னு தெரியாம குழப்பத்துல நடந்திருக்கலாம்.. இப்போ எல்லாம் மாறி, அவங்க நிறைய இழந்து.. இப்போ நல்ல முயற்சிகள் எடுக்கும்போது அதெல்லாம் மறந்து வாழ்த்தனும்.. அதான் நம்ம மண்ணின் மாண்பு… ப்ளீஸ்.. தவறுகள் யார்கிட்ட இல்ல’ என்று கூறி தன் பெருந்தன்மையை காட்டியுள்ளார்.