மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான் – கடும் கடுப்பில் சேரன்.

0
151918
cheran

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக களமிறங்கியவர் சேரன். இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன் ஹீரோவாக ஒரு சில படங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. மேலும், தொடர்ந்து தோல்வி படங்களால் இடையில் சிறிது காலம் சினிமாவில் பிரேக் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் சில காலங்களுக்கு பிறகு சேரன் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் கலந்து கொண்டு மக்களிடையே அதிகமாக பேசப்பட்டு வந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக களமிங்கியுள்ளார். இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக சராயூ மோகன் நடித்து உள்ளார். இவர்களை தவிர இந்த படத்தில் கனா காணும் காலங்கள் இர்பான் நடித்துள்ளார். மேலும்,படத்தில் முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே, வர்மா ஆகியோர் நடித்து உள்ளார்கள். அதிலும் இந்த படத்தில் நடிகை சிருஷ்டி ஒரு காட்சியில் அரை நிர்வாணமாக நடித்துள்ளார். சமீபத்தில் அது குறித்து பேட்டி ஒன்றில் கூட பேசி இருந்தார் சிருஷ்டி.

- Advertisement -

இதையும் பாருங்க : ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸின் திருமணம். பெண் யார் தெரியுமா ? அதுவும் காதல் திருமணமாம்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சேரன், தனது படத்திற்கு விமர்சனம் எழுதுவில்லை என்று சமீபத்தில் வாங்கிய விருதினை ஐகான் ஆப் தி இயர் விருதினை அதற்கு உரிய யூடுயூப் சேனலுக்கு திருப்பி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரபல இனியத்தள விருது விழாவில் லாஸ்லியா, கவின், சேரன் என்று பல பிக் பாஸ் பிரபலத்திற்கு விருது வழங்கப்பட்டது. மேலும், சேரனுக்கு கே எஸ் ரவிக்குமார் இந்த விருதினை அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Image

ஆனால், தனது படத்திற்க்கு விமர்சனம் எழுத மறுத்ததால் இந்த விருதினை திருப்பி கொடுத்துள்ளார் சேரன், இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள சேரன், தாங்கள் கொடுத்த மெடலை அனுப்பியுள்ளேன். மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான்.. சூழ்ச்சியிலே இறையாகும் பறவையல்ல சூட்டிற்குள்ளிருந்து பிறந்துவந்த பறவை. விமர்சனங்கள் செய்யாமல் என் திரைப்படங்களை வீழ்த்தலாம்.. என்னை வீழ்த்தமுடியாது என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement