18 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம், விளக்கில்லா சாலை – தனது சொந்த ஊர் அப்போதும், இப்போதும். சேரன் பகிர்ந்த புகைப்படங்கள்.

0
8133
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த கதை, தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம்.இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பூக்களுமே பாடல் தேசிய விருது பெற்றது.

-விளம்பரம்-

சேரன் அவர்கள் இயக்கிய பல படங்களுக்காக தேசிய விருதுகளை வாங்கி உள்ளார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சேரன் படங்கள் என்றால் அதில் நிச்சயம் சைக்கிள் இடம்பெற்று விடும். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவரை சைக்கிளை பலரும் காலாய்த்தார்கள்.

இதையும் பாருங்க : கௌதமின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கதை இவர் எழுதிய இந்த நாவலின் காப்பியா ?

- Advertisement -

அவ்வளவு ஏன் பிக் பாஸ் 3 கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கூட சாண்டி சைக்கிளை வைத்து தான் சேரனை கலாய்த்து இருப்பார். இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பதிவிட்ட சேரன், தினமும் 9 + 9 கிலோ மீட்டர் சைக்கிள் ஒட்டி போய்தான் +2 படிச்சேன். அந்த பயணத்தில் இருக்கற கதைகள் வேற, 4வது கிலோ மீட்டர்ல ஒரு ஊனமுற்ற மாணவர் தினமும் என் சைக்கிள்ல தான் பிக்கப் டிராப் என்று கூறி இருந்தார்.

Image
ஊர் பிரசிடண்ட்டுடன் சேரன்

இப்படி ஒரு நிலையில் நீண்ட வருடங்களுக்கு பின் தன் சொந்த ஊருக்கு சென்று உள்ளார் சேரன், இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என் ஊருக்கு போயிருந்தேன்.. இதுவரை விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் தனியே செல்வதற்கு சற்று பயமாக இருக்கும் சாலை தான் எங்களுக்கு… இப்போது வழிமுழுவதும் விளக்குக்கம்பங்கள் வந்துவிட்டது. அதன் காரணம் எங்கள் ஊர் பிரசிடெண்ட் தம்பி மு.இளையராஜாவின் முயற்சி. பாராட்டுகிறேன்.

-விளம்பரம்-

எனது ஊரின் பெயர் பழையூர்ப்பட்டி.. வெள்ளலூர் நாடு. மேலூர் தாலுகாவில் இருக்கிறது.. எங்கள் கிராமங்களுக்கென்று சிறப்பான அம்சங்கள் உண்டு. எங்களுக்கான தெய்வங்கள் உண்டு.. எந்த ஊரில் வாழும் சிறுவர்களும் எங்கள் மண்ணில் புரண்டு விளையாட ஆசைப்படுவார்கள்.. மக்களின் மனதும் அதன் ஈரமுமே சான்று என்று பதிவிட்ட சேரன், தனது ஊர் பல ஆண்டுகளுக்கு முன் இப்படி தான் இருந்தது என்று பழைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார்.

Advertisement