கௌதமின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கதை இவர் எழுதிய இந்த நாவலின் காப்பியா ?

0
1348
guitar
- Advertisement -

மணிரத்னம், ஜெயேந்திரா பஞ்சாபகேசன் தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான ஆந்தாலஜி வகை வெப் சீரிஸ் ‘நவரசா’. 9 கதைகள் கொண்ட இந்த சீரிஸ்ஸில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ் ராஜ், பார்வதி, ரேவதி, ரோகிணி எனப் பல முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி என்னும் ஒன்பது அபிநயங்களை கருப்பொருளாகக் கொண்டு இந்த ஆந்தலாஜி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
இறவான்: Iravaan - A novel (Tamil Edition) eBook : பா. ராகவன் , Pa Raghavan:  Amazon.in: Kindle Store

இதில் காதல் என்ற தீமில் உருவாகி இருப்பது தான் கௌதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ .‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணை தாண்டி வருவாயா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘அச்சம் என்பது மடமையடா’ என தன்னுடைய முந்தைய படங்களை எல்லாம் கெளதம் மேனன் சரியான அளவில் சேர்த்து அரைத்து கொடுத்துள்ளது போல இருக்கிறது இந்த ‘கிட்டார் கம்பி மேலே நின்று’. 

இதையும் பாருங்க : உன்னாலே உன்னாலே பட நடிகையை ஞாபகம் இருக்கா ? 43 வயதில் நீச்சல் உடையில் கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

நவராசா சீரிஸ்ஸில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பகுதி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மியூசிக்கல் சப்ஜெட்டில் கதை சொல்கிறேன் என்று திரைக்கதையில் எந்த ஸ்வாரஸ்யத்தையும் வைக்காமல் வெறும் வசனத்தை மட்டுமே வைத்து நகர்கிறது இந்த சீரிஸ். இப்படி ஒரு நிலையில் இந்த கதை பிரபல எழுத்தாளர் பா.ராகவன் எழுதிய இறவான் என்ற நாவலை தழுவியது என பா.ராகவனின் வாசகர்கள் பலரும் எழுதி வருகின்றனர். 

இறவான் நாவலின், நாயகன் ஒரு இசை கலைஞர். அவர் வெளிநாட்டுக்கு சென்று இசைத் திறமையை நிரூபிக்க ஆசைப்படுகிறார். மேலும்,  சிறு வயதில் தான்  கேட்ட குரலுக்கு சொந்தக்காரியை தேடி, பின்னர் அவரது குரலில் தன் பாடலை பாட வைக்கிறார். அப்போது நாயகியின் மீது காதலில் விழுகிறார் நாயகன். இதே ஒன் லைனில் தான் கெளதம் மேனனின் ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ கதையும் இருப்பது போல விமர்சனங்கள் எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement