முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக்கொடுத்ததால்தான் இந்த தைரியம் வருது – இரண்டாம் குத்து படத்திற்கு எதிராக கொந்தளித்த சேரன்.

0
876
cheran
- Advertisement -

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமான ‘இரண்டாம் குத்து’ படத்திற்கு இயக்குனர் சேரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஹர ஹர மஹாதேவிக்கி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இளம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அதன் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ‘ படத்தின் மூலமும் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்தார். இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இருட்டு அறையில் முருட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் டீஸர் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும். பெரும்பாலானோர் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த படத்திற்கு எதிரியாக பாரதி ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் இந்த படக்குழுவை கடுமையாக விமர்சித்து இருந்தார் பாரதிராஜா.

- Advertisement -

அதற்கு பதிலடி கொடுத்த இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர், பாரதி ராஜா இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘டிக் டிக் டிக்’ படத்தில் இடம்பெற்ற ஒரு போஸ்டரை பதிவிட்டு ‘மதிப்பும் மரியாதையுடன் இதை சொல்கிறேன்,, டிக் டிக் டிக் படத்துல இத பாத்து கூசாத கண்ணு, இப்போ கூசிரிச்சோ’ என்று பதிலடி கொடுத்திருந்தார். ஆனால், தனது ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை தெரிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாரதி ராஜாவை தொடர்ந்து சேரனும் இந்த படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர் சேரனிடம் இந்த படம் குறித்து ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் ‘ இரண்டாம்குத்து எனும் படம் உங்க திரை உலகுக்கே கலங்கம் கற்பிப்பது. சொரியான் வழியில் free sex culture, முற்போக்குன்னு சொல்லி தலைமுறைகளையே சீரழிக்கிறது. இன்றும் திரைமீது மதிப்பிருக்க காரணம் உங்களைப் போன்ற இயக்குனர்களே. சேரன் , பாரதிராஜா இதற்கு உங்கள் கண்டனம் தேவை. ‘என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பதில் அளித்துள்ள சேரன் ‘மக்கள் இதுபோன்ற படங்களை புறந்தள்ளினால் போதும்.. ஏற்கனவே முதல் குத்துக்கு கலெக்‌ஷனை அள்ளிக்கொடுத்ததால்தான் இந்த தைரியம் வருது… ஆனாலும் அந்த போஸ்டர் அருவருப்பான ஆபாசம்.. கண்டிப்போம்.. இனியாவது வேறறுப்போம்.. அரசும் இதுபோன்ற படங்களை தடைசெய்யனும்’ என்று குறிப்பிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் ட்விட்டர் டேக் செய்துள்ளார்.

Advertisement