தமிழ் சினிமா உலகில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் சேரனும் ஒருவர். இவர் சினிமா உலகில் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் சொல்ல மறந்த நடிகரும் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், ராமன் தேடிய சீதை, யுத்தம் செய் உள்ளிட்ட பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். அந்த வகையில் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. வசூல் சாதனை பெற்றது என்றும் சொல்லலாம். மேலும், நடிகர் விஜய் அவர்கள் அளித்த பழைய பேட்டி ஒன்றில் ஆட்டோகிராப் படம் குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.
அவர் வாழ்க்கையில் கடந்து வந்த ஆட்டோகிராப் கதையையும் கூறியிருந்தார். பிறகு அந்த வீடியோவை ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் பதிவிட்டார். இந்நிலையில் இதனை பார்த்து இயக்குனர் சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது, பிரபல தியேட்டரில் ஆட்டோகிராப் படம் பார்த்து விட்டு போனில் விஜய் அவர்கள் என்னை பாராட்டியதை மறக்க முடியாது.
அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்ய ஒத்துக்கொண்டார் . ஆனால், நான் அப்போது தான் தவமாய்தவமிருந்து படத்தில் பிசியாக இருந்ததால் அவருடன் சேர்ந்து பண்ண முடியாமல் போனது. அந்த தவறை நான் செய்திருக்க கூடாது. தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என்று நினைத்து தான் விஜய் படத்தை அன்று கைவிட்டேன். அது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன்.
இந்த தவறுக்கான வருத்தத்தை விஜய் அவர்களை நேரில் பார்த்து சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கிறேன். நேரில் சந்திக்கும்போது கண்டிப்பாக தெரிவிப்பேன் என கூறி உள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரன் அவர்கள் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படத்தை சாய் ராஜ்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.