விவாகரத்து பிரச்சனை, ஷிவானியுடன் கிசு கிசுவால் பறிபோன பிக் பாஸ் 4 வாய்ப்பு, இந்த முறை எட்டிப்பிடித்த அசீம் – நிலைப்பாரா ?

0
876
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பகல் நிலவு சீரியல் நடிகர் அஸீம் கலந்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பல எதிர்பார்களுடன் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால் நாளுக்கு நாள் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-
azeem-1

அதேபோல் கமல் தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருந்தது. இந்த முறை நிகழ்ச்சியில் கொஞ்சம் வித்தியாசமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த வகையில் பொது மக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியின் போட்டியாளர்களை தேர்வு செய்வதில் சேனல் தரப்பில் இருந்து கூடுதல் கவனம் செய்யப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : CWCயில் உருவக்கேலிக்கு உள்ளாகும் தன் மனைவி – வெளுத்து வாங்கிய கருணாஸ். வைரலாகும் வீடியோ இதோ.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி:

மேலும், இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாக போகிறது. தினமும் டிவியில் ஒரு மணி நேரம் அதாவது 9:30 ஒரு ஒளிபரப்பாகும். பின் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட போட்டியாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். மேலும், போட்டியாளர் குறித்த இறுதி பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து கொண்டே வருகிறது.

-விளம்பரம்-

நிகழ்ச்சி குறித்த தகவல்:

அந்த வகையில் நடன இயக்குனர் ராபர்ட், நடிகை ரக்ஷிதா, விசித்ரா, அர்ச்சனா, ஜிபி முத்து, சிவகுமார், விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், அமுதவாணன் என பல பேர் அடிபட்டு வருகிறது. இதில் யாரெல்லாம் பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் அனைவரும் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் குவாரன்டைனில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

போட்டியாளர்கள் குறித்த தகவல்:

மேலும், இந்த முறையும் நிகழ்ச்சியில் திருநங்கை சிவின் கணேசன் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6ல் நடிகர் அஸீம் கலந்து கொள்ள இருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பகல் நிலவு என்ற தொடரில் நடித்திருந்தார். இத்தொடரில் அசிம்-சிவானி கெமிஸ்ட்ரி வேற லெவல். மேலும், இவர்களுக்குள் ஏற்பட்ட காதல் காரணமாக தான் அசீம் மனைவியை பிரிந்தார் என்றும் அசீம் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் தன் மகள் பெயர் பாதிக்கும் என்று ஷிவானி அம்மா பிரச்னை செய்ததாக தகவல்கள் அப்போது வெளியானது.

அஸிம் குறித்த தகவல்:

பிக் பாஸ் 4ல் கலந்துகொள்ளவில்லை என்றாலும் பிக் பாஸ் சீசன் 5வில் கலந்துகொள்ள முயற்சிகள் நடந்தது. இப்படி ஒரு நிலையில் அசீம் சன் தொலைக்காட்சியின் பூவே உனக்காக தொடரில் கமிட் ஆனார். அந்த சீரியலும் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இப்படி இரண்டு முறை பிக் பாஸ் வாய்ப்பை இழந்த அசீம் இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்கும் நுழைந்து இருக்கிறார். இவருக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.

Advertisement