CWCயில் உருவக்கேலிக்கு உள்ளாகும் தன் மனைவி – வெளுத்து வாங்கிய கருணாஸ். வைரலாகும் வீடியோ இதோ.

0
587
karunas
- Advertisement -

பாடி சேமிங் காமெடி குறித்து கருணாஸ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் அரசியல்வாதியும் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதன் பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து இருக்கிறார். பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் பாடியும் இருக்கிறார்.

- Advertisement -

கருணாஸ் திரைப்பயணம்:

தற்போது இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி இருந்தார். ஆனால், சமீப காலமாக கருணாஸ் அரசியலுக்கு போவதில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இறுதியாக இவர் சூரரை போற்று, சங்கத்தலைவன், விருமன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கருணாஸ் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். கருணாஸ் நடித்த ஆதார் படம் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது.

grace

கருணாஸ் நடிக்கும் படம்:

இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அருண் பாண்டியன், ரித்விகா, இனியா, திலீப் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது கருணாஸ் அவர்கள் சசிகுமாருடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் கருணாஸ் தயாரித்து வருகிறார். இந்நிலையில் பாடி சேமிங் காமெடி குறித்து கருணாஸ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கருணாஸ் அளித்த பேட்டி:

சமீபத்தில் வெளியான ஆதார் படத்திற்கான பேட்டியில் கருணாஸ் பங்கு பெற்றிருந்தார். அதில் பாடி ஷேமிங் காமெடி பத்தி என்ன நினைக்கிறீர்கள் கிரேஸ் அக்காவையே நிறைய பாடி ஷேமிங் காமடி பண்ணி இருக்குக்காங்க என்று தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு கருணாஸ் கூறியது, எனக்கு பிடிக்கவில்லை. பாடி ஷேமிங் குறித்து காமெடி பண்ணுவதெல்லாம் காமெடியே இல்லை என்று தான் சொல்லுவேன். சித்திக் என்ற ஒரு இயக்குனர் வடிவேலு ஆணியை புடுங்க வேணாம் என்ற ஒரு காமெடி வரும். அந்த இயக்குனர் ஒரு காமெடியை காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வேலை வரும் வரை எடுக்கிறார். சாப்பிட்டு வந்த பிறகும் அதே காமெடி எடுக்கிறார். நான் ஏன் ஒரு காமெடிக்காக இப்படி மெனக்காடுகிறீர்கள்? காமெடி சீன் என்பது ஒரு சூட்டிங் முடியும் நேரத்தில் ஐந்து நிமிடத்தில் எடுக்கும் காட்சி.

பாடி சேமிங் காமெடி குறித்து சொன்னது:

இதற்காகவே ஒரு நாள் முழுவதும் இருக்கிறீர்களே என்று கேட்டேன்? அதற்கு அவர், காமெடி என்பது பார்த்த உடனே சிரித்து விட்டு மறந்து போவதில்லை. காலங்கள் கடந்தாலும் அடுத்த தலைமுறையிலும் கண்டு மகிழக்கூடிய ஒன்று. அதனால் தான் அப்படி எடுக்கிறேன் என்று சொன்னார். இப்போதெல்லாம் வருகிற பாடி ஷேமிங் காமெடிகள் எல்லாம் பார்க்கும்போது சிரித்து விட்டு அடுத்த வருடமே கேட்டால் மறந்து போய்விடுவார்கள். அதனால் தான் வடிவேல் உடைய காமெடியும் இன்றும் பேசப்படுகிறது. லொடுக்கு பாண்டி காமெடி என்றும் மக்கள் மத்தியில் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement