துப்பாக்கி முனையில் மிரட்டி 20 வயது பெண்ணை கற்பழித்ததாக பிக் பாஸ் போட்டியாளரின் தந்தை மீது புகார்.

0
1385
Bigg-Boss
- Advertisement -

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் ஷெஹ்னாஸ் கில். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷெஹ்னாஸ் கில். இவர் பஞ்சாபி படங்களில் நடித்து வருகிறார். பின் இவர் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 13ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷெஹ்னாஸுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துவிட்டார்கள். தமிழில் ஓவியா ஆர்மி போல் ஹிந்தியில் ட்விட்டரில் ஷெஹ்னாஸ் ஆர்மி தான். இந்நிலையில் ஷெஹ்னாஸ் கில்லின் தந்தை சந்தோக் சிங் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஷெஹ்னாஸ் கில்லின் தந்தை சந்தோக் சிங் என்பவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த 20 வயது பெண்ணை துப்பாக்கிமுனையில் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Bigg Boss-fame Shehnaaz Gill's father Santok Singh booked on rape ...

அவர் இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த ஜலந்தர் பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். புகாரின் படி சந்தோக் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பலாத்கார சம்பவம் கடந்த 14ம் தேதி நடந்தது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. அந்த பெண் தனது காதலர் ரந்திரை பார்க்க சந்தோக் சிங் வீட்டிற்கு சென்று உள்ளார். ஷெஹ்னாஸின் தந்தை அவருக்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தாராம்.

- Advertisement -

ரந்திரை பார்க்க வேண்டும் என்றால் தன் காரில் தன்னுடன் வருமாறு கூறி அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்ததாரம். பின்னர் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து வந்து அவரின் தோழி சீமாவுடன் அனுப்பி வைத்தார் என்று அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்து உள்ளது. பின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹர்ப்ரீத் கவுர் அவர்களிடம் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சந்தோக் சிங் மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்தார்கள். பிறகு போலீசார் சந்தோக் சிங்கை தேடி அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

बिग बॉस कंटेस्टेंट शहनाज के पापा पर ...

ஆனால், அவர் அதற்குள் தலைமறைவாகிவிட்டார். தீவிரமாக போலிசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறது. மேலும், இது குறித்து சந்தோக் சிங் மகன் ஷாபாஸிடம் கேட்டதற்கு அவர் கூறியது, பஞ்சாப் போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது உண்மை தான். ஆனால், இது பொய் புகார். அந்த பெண் என் தந்தையின் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார். அந்த பெண் பொய் சொல்கிறார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அதோடு சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. அதன் பதிவுகளை பெற ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று கூறினார்.

-விளம்பரம்-
Advertisement