காவேரி பிரச்சனைக்கு மதிப்பு கொடுத்து அதை கூட ரத்து செஞ்சேன், இதனால் எனக்கும் பெரும் நஷ்டம் – பெங்களூரு சம்பவம் குறித்து சித்தார்த்

0
1287
- Advertisement -

சித்தா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரம் குறித்து சித்தார்த் விளக்கம் அளித்துள்ளார். தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருந்தார்.

- Advertisement -

பின் பெங்களூரு எஸ் ஆர் வி திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சித்தார்த்பேசி இருந்தார். அப்போது கழுத்தில் சிவப்பு- மஞ்சள் நிற துண்டு போட்ட கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்தனர்.அப்போது மேடையில் சித்தார்த் தனியாக அமர்ந்து கொண்டு படம் குறித்து பேசினார். இதை பார்த்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் சித்தார்த்தை மிரட்டினர்.

பின் அந்த அமைப்பினர், தண்ணீர் தமிழ்நாட்டுக்கு போகிறது. நீங்கள் படம் பத்தி பேசுகிறீர்களா? என்று சித்தார்த்தை பார்த்து ஆவேசமாக பேசிஇருந்தார்கள். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று சத்தம் போட்டனர்.பின் இப்போது இந்த படம் தேவையா? தமிழ் படத்தை பற்றி இப்போது இங்கு பேசணுமா? நீங்கள் எல்லோரும் வெளியில் வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று போராடுங்க.

-விளம்பரம்-

அதை விட்டு படத்தைப் பற்றி பேசுவதா? ஆர்டர் போட நாங்க வரல. ஆனா கோரிக்கையா கேட்கிறோம் என்று கோஷமிட்டு பேசினர். அதுமட்டுமில்லாமல் அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டினர். பின் சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூட மன்னிப்பு கேட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகர் சித்தார்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசியுள்ள அவர் ‘படம் வெளியாவதற்கு முன்பாக 2000 மாணவர்களுக்கு இந்த படத்தை காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆனால் காவேரி போராட்டத்திற்கு மதிப்பு கொடுத்து அதனை நாங்கள் ரத்து செய்திருந்தோம். இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் பார்த்தீர்கள். அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. என் படத்திற்கும் காவிரி பிரச்சனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பணத்தை செலவு செய்து நான் உருவாக்கும் படம் சமூக பொறுப்புகளை வெளிப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். ஆனால் ஒரு நல்ல படத்தைப் பற்றி அங்கிருந்தவர்களுடன் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.

Advertisement