தாக்கு பிடித்து 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? பிக் பாஸ் மூலம் அவர் சம்பாதித்த பெரும் தொகை.

0
397
- Advertisement -

தமிழில் அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 76 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ. ஜோவிகா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய் வர்மா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் பங்குபெற முடியாத சூழல் ஏற்பட்டது. அதோடு இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் விஷ்ணு, கூல் சுரேஷ், தினேஷ், நிக்சன், அனன்யா, அர்ச்சனா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் யாரும் எதிர்ப்பாக்காத வகையில் முதல் மிட் வீக் எவிக்ஷன் நடைபெற்று இருந்தது.

- Advertisement -

இறுதியில் நிகழ்ச்சியில் இருந்து அனன்யா வெளியேறி இருக்கிறார். இதனால் மீதம் தினேஷ், கூல் சுரேஷ், அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் ஆகியோர் இந்த வார நாமினேஷனில் தொடர்ந்தனர். இதில் நிக்சன் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்ட்டது. கடந்த சில வாரங்களாகவே கூல் சுரேஷ் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது.

அவரால் ஓரளவுக்கு மேல் ஏற முடியாததால் மணி உதவியுடன் மீண்டும் கீழே இறங்கிவிட்டார். இதைடுத்து கூல் சுரேஷை கன்பெஷன் ரூமுக்கு அழைத்து அவரின் செயலை கண்டித்த பிக்பாஸ், அறிவுரை கூறினார். சிறிது நேரம் கதறி அழுத கூல் சுரேஷ், இனி இதுபோன்ற செயல்கள் செய்ய மாட்டேன் என கூறிவிட்டு சென்றார்.கூல் சுரேஷ் இப்படி செய்ததால் இந்த வாரம் பிக் பாஸ் எவிக்ஷனில் குழப்பம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே அவரை சேனலே வெளியில் அனுப்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே பிரபலங்கள் கலந்துகொள்வது வாடிக்கையான ஒரு விஷயம் தான். அந்த வகையில் இந்த சீசனில் முதல் போட்டியாளராக உள்ளே சென்ற கூல் சுரேஷை பற்றி சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். வெளியில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பிக் பாஸில் பெரிதாக எந்த சர்ச்சையில் சிக்காமல் தான் இருந்தார் கூல் சுரேஷ். அதே போல மக்கள் மத்தியில் பெரிதாக வெறுப்பையும் சம்பாதிக்காமல் தான் பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்து வரை பிரபலத்திற்கு ஏற்ற வகையில் நாள் சம்பளம் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த சீசனில் குறைந்தபட்ச சம்பளமே ஒரு நாளைக்கு 20000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கூல் சுரேஷுக்கு ஒரு நாளைக்கு 25ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் 75 நாட்கள் இருந்த கூல் சுரேஷுக்கு மொத்தமாக 18,75,000 சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement