பைபிளை விட அது அதிகமாக விக்குது அதுக்குன்னு அதுக்காக – விஜய்யை மோசமாக விமர்சித்த பீஸ்ட் நடிகர்

0
362
- Advertisement -

நடிகர் விஜய்யை சரக்குடன் ஒப்பிட்டு பேசிய பீஸ்ட் பட நடிகரை ரசிகர்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாக ஒரு ஹிட் படம் கொடுத்தால் அடுத்த படம் பிளாப் ஆகிவிடும் என்பது விஜய்யின் சமீப கால ராசியாக இருந்து வருகிறது. மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார் விஜய். இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தனர்.

-விளம்பரம்-

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை தான் ஏற்ப்படுத்தி இருந்தது. படத்தில் தீவிரவாதிகளை ரொம்பவே வீக்காக காண்பித்தது, மிகவும் தீவிரவாத கதை, மோசமான காமடி காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஒரு மாலை சுற்றியே இந்த படம் நடந்ததால் இந்த படத்தின் திரைக்கதையும் படு மோசமாக போனது. பீஸ்ட் படம் வெளியான முதல் நாளே இந்த படத்தை பலரும் கேலி செய்தனர்.

- Advertisement -

பீஸ்ட் பட கிண்டல்:

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் கிளைமாக்சில் விஜய் Jet பறக்கும் காட்சிகளை உண்மையான Jet வீரர்கள் காலய்த்து தள்ளியதால் இந்த படம் இந்திய அளவில் Troll படமாக அமைந்து இருந்தது. மேலும், இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாள நடிகர் Shine Tom Chacko. இவரே இந்த படத்தை கலாய்த்து பேசி இருந்தது பெரும் சர்ச்சையானது. இந்த படத்தில் இவர் தீவிரவாத கும்பலில் ஒரு நல்லவராக நடித்து இருந்தார். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார்.

நடிகர் Shine Tom Chacko அளித்த விமர்சனம்:

இவர் தமிழில் ஹரி இயக்கத்தில் 2011 இவர் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த வேங்கை திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் பீஸ்ட் படத்தில் நடித்தார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஆனாலும், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருந்தார். அதில் அவர், ஒரு காட்சியில் விஜய் என்னை கட்டி அழைத்து செல்வார். பொதுவாக யாரவது ஒரு வெயிட்டை தூக்கினால் கூட முகத்தில் கஷ்டம் தெரியும்.

-விளம்பரம்-

நடிகர் Shine Tom Chacko பேட்டி:

ஆனால், விஜய் தன் முகத்தில் அப்படி எதையும் காட்டவில்லை. இதுக்கு விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக்குழு தான் காரணம். நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் குறித்த கேலிகளை பார்த்தேன். இது நாள் வரை பீஸ்ட் படத்தை மற்றவர்கள் தான் கேலி செய்து இருந்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்த நடிகரே இப்படி சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து இருந்தார்கள். இதற்கு காரணம், இவருக்கு சரியான கதாபாத்திரம் கிடைக்காததனால் தான் இப்படி பேசுகிறார் என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

விஜய் குறித்த விமர்சனம்:

இந்த நிலையில் நடிகர் Shine Tom Chacko மீண்டும் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் என்ன மம்முட்டி மோகன்லால் விட சிறந்த நடிகரா? அவருக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தால் அவர் சிறந்த நடிகராக மாறிவிடுவாரா? பைபிள் விட ஆல்கஹால் அதிகமாக விற்பனை ஆகிறது. அதற்காக ஆல்கஹால் சிறந்தது ஆகிவிடுமா? என்று பேசி இருக்கிறார். இப்படி இவர் பேசியதை பார்த்த விஜய் ரசிகர்கள், விஜய்யை ஆல்கஹால் உடன் ஒப்பிடுவதா? எப்படி நீங்கள் அவரை தரக்குறைவாக பேசலாம் என்று கோபத்தில் திட்டி மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Advertisement