‘2,50,000,00 வேண்டும்’ – சத்குருவிற்காக வீடியோ வெளியிட்டு ரசிகர்களிடம் சமந்தா வைத்த வேண்டுகோள் – கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
527
samantha
- Advertisement -

சதகுருவுடன் பைக்கில் செல்ல ரசிகர்களிடம் சமந்தா வைத்த வேண்டுகோளால் பலரும் சமந்தாவை திட்டி தீர்த்து வருகின்றனர். தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீப காலமாகவே சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஊ சொல்றியா என்ற பாடலுக்கு சமந்தா செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். அதனை தொடர்ந்து விஜய் தேவர்கொண்டா நடிக்கும் படத்திலும் குத்தாட்டம் போட இருக்கிறார். பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா நடித்து இருந்தார்.இதனை தொடர்ந்து இவர் சாகுந்தலம், யசோதா, திரில்லர் கதை சமந்தா கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : சினிமாவை நம்பி அரசு வேலையை விட்டு தற்போது வாய்ப்பில்லாமல் தவித்து வரும் சிவகார்த்திகேயன் பட நடிகர்.

- Advertisement -

சமந்தாவும் சத்குருவும் :

மேலும், சமந்தா சத்குருவின் தீவிர பக்தை என்பது பலரும் அறிந்த ஒன்று. சமீபத்தில் மண்ணை காப்போம் என்று சத்குரு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் சமந்தா. தென்னிந்திய சினிமாவில் உள்ள பல்வேறு நடிகைகளும் சத்குருவின் பக்கதர்களாக தான் இருந்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக தமன்னா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங்,சமந்தா என பல்வேறு நடிகைகள் சத்குருவின் மிகுந்த பக்தைகள் தான்.

சத்குரு நடத்திய நிகழ்ச்சியில் சமந்தா :

குறிப்பாக இவர்கள் அனைவரும் சிவராத்திரி பூஜைகளில் தவறாமல் விசிட் அடித்துவிடுவார்கள். அதேபோல் நடிகை சமந்தா சிவராத்திரியில் ஈஷா யோகாவில் சத்குரு நடத்தும் நிகழ்ச்சிக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொள்ளவில்லை. அந்த சமயத்தில் தான் சமந்தாவிற்கு விவாகரத்து நடைபெற்று இருந்தது. இப்படி ஒரு நிலையில் விவாகரத்துக்கு பின்னர் முதன் முறையாக சத்குருவை சந்தித்து உள்ளார் சமந்தா. அதாவது சத்குருவின் Save Soil நிகழ்ச்சி தொடர்பாக சமந்தா சந்தித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

சத்குருவை பேட்டி கண்ட சமந்தா :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் சத்குருவை பேட்டி எடுத்து இருக்கும் சமந்தா இது குறித்து பேசியுள்ள போது  "நான் பதட்டமாக இருந்தேன், மிகவும் பதட்டமாக இருந்தேன். சத்குரு என் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம். இன்று அவரை நேர்காணல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் நான் உரையாடலை விரும்பினேன். இரண்டரை மணி நேரத்தை ஒரு மணி நேரம் போல்  போல் உணர்ந்தேன் என்று கூறியுள்ளார். 

கழுவி ஊற்றும் ரசிகர்கள் :

மேலும், இந்த வீடியோவிற்கு தனக்கு 2.5 மில்லியன் லைக்ஸ் வேண்டும் அப்போது தான் நான் சத்குருவுடன் பைக்கில் செல்ல முடியும் என்று கூறியுள்ளார் சமந்தா. இந்த வீடியோவை கண்ட பலரும் சமந்தாவை கழுவி ஊற்றி வருகின்றனர். சாய் பல்லவி போன்ற ஆட்கள் சமூக பிரச்சனை குறித்த கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றார்கள். ஆனால், நீங்கள் இப்படி செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  
Advertisement