டெலிவரி போகிற வரைக்கும் நெகட்டிவ் ரிசல்ட் காட்டுச்சினு எல்லாம் சொன்னாங்க – குழந்தை பிறந்த படபடப்பு தருணத்தை பகிர்ந்த டேனி.

0
15303
deniel
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்குபெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் டேனி. ஆனால், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு என்ற கதாபாத்திரத்தில் இவர் பேசிய ‘பிரெண்டு லவ் மேட்டரு’ என்ற வசனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் இடைத்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி மேடையில் தனது காதலியான டெனிஷாஎன்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் தேதி தனது காதலி டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்ட டேனி, திருமணத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதையும் பாருங்க : டி-டோட்லர், நான் வெஜ் சாப்பிட மாட்டார்னு சொன்னிங்க. இது என்ன ? – வனிதாவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

இந்த நிலையில் டேனிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை மிகவும் மகிழ்ச்சியாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் டேனி. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டேனி, எனக்கு பயம் வந்ததுக்கு காரணம் இந்த கொரோனா தான். என் மனைவி கர்ப்பமாக இருந்த பின்னர் முறையாக செக்கப் போய்க்கொண்டிருக்கும் போது பயம் மட்டும் போகவே இல்லை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்களே ? டெலிவரி போகிற வரைக்கும் நெகட்டிவ் ரிசல்ட் காட்டுச்சி டெலிவரிக்கு பிறகு எடுத்தா பாசிட்டிவ் என்றெல்லாம் வந்துச்சு என்று ஒருத்தங்க பீதியை கிளப்பி விட்டுட்டாங்க.

டேனி திருமணம்

எப்படியோ குழந்தை பிறந்தது. அவன் பிறந்த அடுத்த நொடி உள்ளே தூக்கி கொண்டு சென்றுவிட்டார்கள். நாலாவது நாள் தான் எங்கள் கண்ணில் காட்டினார்கள். பிறந்த 48 மணி நேரத்தில் கோவிட் டெஸ்ட் எடுத்தார்கள். அந்த நேரமெல்லாம் விவரிக்க முடியாத படபடப்பாக இருந்தேன். தற்போது எல்லாம் நல்லபடியாக முடிந்து அம்மா மற்றும் மகன் இருவரையும் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் டேனி

-விளம்பரம்-

Advertisement