என்ன பாத்தா உனக்கு என்ன அப்படி ஏறுது – அடை மொழி வைத்த அபிஷேக்கை வெளுத்து வாங்கிய இசை.

0
1295
abhishek

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் போட்டியாளர்கள் அனைவருமே கொஞ்சம் ஜாலியாக தான் இருந்து வந்தனர். அதேபோல வீட்டில் பெரிதாக சண்டையோ சர்ச்சையை எழவில்லை. இடையில் நமிதா மாரிமுத்து மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவருக்கு மட்டும் லேசாக சண்டை எழுந்தது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதுவும் சமாதானத்தில் முடிந்துவிட்டது.

முதல் வாரத்தில் போட்டியாளர்களுக்கு கடந்து வந்த பாதை டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து பேசி இருந்தார்கள். அதிலும் குறிப்பாக திருநங்கையான நமிதா மாரிமுத்து பேசியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த சனிக்கிழமை நமிதா மாரிமுத்து சில தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறிவிட்டதாக அறிவித்தனர்.

- Advertisement -

மேலும், நமிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர் ஒருவரிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிந்து ரகளை செய்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதே போல கடந்த வாரம் நாமினேஷன் நடைபெறாததால் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேசன் நடைபெற்றது. இதில் இந்த வார தலைவர் தாமரை மற்றும் பாவனியை தவிர 16 பேர் நாமினேட் ஆகியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக் அனைவருக்கும் பட்டப் பெயர் வைத்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement