ஒரு ஆண் தன்னை தொட கூடாது என்று சொல்வதற்கு உரிமை கிடையாதா? – ஆவேசத்தில் தீபக் மனைவி சொன்னது

0
134
- Advertisement -

சௌந்தர்யா- தீபக் விவகாரம் குறித்து தீபக் மனைவி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 விஜய் தொடங்கி 105 நாட்கள் நடந்து வெற்றிகரமாக கடந்த மாதம் தான் முடிந்தது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி இருந்தார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி இருந்தது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். மேலும், அனைவரும் எதிர்பார்த்தபடி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முத்துக்குமரன் தான் டைட்டில் பட்டதை வென்று கோப்பையை வாங்கி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இவரை அடுத்து இரண்டாம் இடத்தை சௌந்தர்யா, மூன்றாம் இடத்தை விஷால், நான்காம் இடத்தை பவித்ரா, ஐந்தாம் இடத்தை ராயன் வென்று இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சௌந்தர்யா- தீபக் விவகாரம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு முறை பிங்க் கலரை தொட வேண்டும் என்பதற்காக சௌந்தர்யா அலைந்து கொண்டிருந்தார். அப்போது தீபக் பிங்க் கலரில் ஆடை அணிந்திருந்தார்.

சௌந்தர்யா- தீபக் விவகாரம்:

உடனே ஓடிப்போய் அவரை சௌந்தர்யா தொட்டு விட்டார். இதனால் டென்ஷனான தீபக், என்னுடைய அனுமதி இல்லாமல் எப்படி என்னை நீ தொடுவாய்? என்று கோபமாக அவரிடம் கேட்க, அதற்கு சௌந்தர்யா, இது சாதாரண ஒரு விஷயம். எதற்கு இவ்வளவு டென்ஷன் ஆகிறீர்கள் என்று கேட்கிறார். ஆனால், தீபக் ஏற்றுக்கொள்ளவே இல்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் என்னை யாரும் தொடக்கூடாது என்று கோபமாக பேசியிருந்தார். இது அப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

தீபக் மனைவி பேட்டி:

இதற்கு சிலர் தீபத்திற்கு ஆதரவாகவும், சிலர் சௌந்தர்யாவிற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்திருந்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தீபக்கின் மனைவி சிவரஞ்சனி,
சௌந்தர்யா-தீபக் விவகாரத்தில் நடந்ததை தலைகீழாக நினைத்து பாருங்கள். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்து, ஒரு ஆண் அவரை அனுமதி இல்லாமல் தொட்டு இருந்தால் இப்படியா ரியாக் செய்திருப்பார்கள். நிச்சயம் அந்த பெண்ணை தொட்ட ஆணுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பக்கூட வாய்ப்பு இருந்திருக்கிறது.

சர்ச்சைகளுக்கு கொடுத்த பதிலடி:

ஒரு பெண்ணுக்கு உரிமை இருக்கும்பொழுது ஒரு ஆணுக்கும் அதே மாதிரி சம அளவில் உரிமை இருக்கிறது. ஏன் ஒரு ஆண் தன்னை தொட வேண்டும் என்றால் அனுமதி கேட்டு விட்டு தான் தொட வேண்டும் என்று சொல்வதற்கு உரிமை கிடையாதா? இதையெல்லாம் சோசியல் மீடியாவில் பெரிய விவாதமாக எடுத்து தீபக்கை பலருமே திட்டி இருந்தார்கள். விமர்சனம் செய்பவர்களுமே தீபக்கை தான் திட்டி இருந்தார்கள். அதை பார்க்கும்போது ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்கள் என்ற கேள்வி எல்லாம் எனக்குள் வந்தது. தன் உடம்பை தன்னை கேட்காமல் தொடக்கூடாது என்று ஒரு ஆண்மகன் சொல்லக்கூடாதா? என்று கூறியிருக்கிறார்.

Advertisement