பிக் பாஸ் வீட்டில் நுழைந்த பிரபல நடிகர்..! வெளியான புகைப்படம்.!

0
373
kamal

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது, இறுதி வாரம் என்பதால் கடந்த சில நாட்களாக பலரும் சிறப்பு விருந்தினராக வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

Devar

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியான “அர்ஜுன் ரெட்டி” என்ற படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. தெலுங்கில் 2011 ஆம் ஆண்டு வெளியான “நுவ்விலா” என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது “அர்ஜுன் ரெட்டி ” திரைப்படம் தான்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தேவர்கொண்டா “நோட்டா “என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளரான யாஷிகா ஆனந்தும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய் தேவர்கொண்டா பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.

நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள முதல் நேரடி தமிழ் படம் இது என்பதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளை மும்மரமாக தொடங்கி விட்டனர். இந்த திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.